தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 16 juli 2013

இலங்கைக்கு எதிரான பயண எச்சரிக்கைகள் தேவை இல்லை: அரசாங்கம் விளக்கமளிப்பு

வட மாகாண சபைக்கான முதலாவது கட்டுப்பணத்தைக் சுயேட்சைக் குழுவினர் கட்டினர்
[ செவ்வாய்க்கிழமை, 16 யூலை 2013, 02:38.42 AM GMT ]
வடக்கு மாகாணசபை தேர்தல் நடைபெறவுள்ளதாக கூறப்படும் நிலையில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக சுயேட்சைக் குழு ஒ ன்று யாழ்.தேர்தல்கள் திணைக்களத்தில் முதலாவதாக கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்திரு க்கின்றனர்.
மாகாணசபை தேர்தல் தொடர்பான பல சார்ச்சைகள் நிலவிவரும் நிலையில் குறித்த சுயேட்சைக் குழு இன்று காலை கட்டுப்பணத்தை ச் செலுத்தியிருக்கின்றது. குறித்த சுயேட்சைக் குழு சார்பில் முதன்மை வேட்பாளராக போட்டியிடவுள்ளவர் யாழ்.மாவட்டத்தில் பிரபல்ய மான ஜனாதிபதி சட்டத்தரணி செல்வி சாந்தா அபிமன்ன சிங்கத்தின்
சகோதரர் மாணிக்கசோதி என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் குறித்த சுயேட்சைக் குழு சார்பில் 19பேர் போட்டியிடவுள்ளதாகவும் விரை வில் அவர்களின் பெயர் விபரங்களை பத்திரிகையாளர்களிடம் வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ள சுயேட்சைக் குழுவின் முதன்மை வேட்பாளர்
தாம் தேர்தலில் போட்டியிட்டு வெல்லப்போவதில்லை என்பது தமக்குத் தெரியும் எனவும் எனினும் இந்த தேர்தல் திரு விழாவுக்குள் சில ரின் முகமூடிகளை அகற்றவேண்டியிருப்பதால் அதனைச் செய்வதற்காகவே தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும் தனக்கு நெருக்கமான சிலரிடம் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிரான பயண எச்சரிக்கைகள் தேவை இல்லை: அரசாங்கம் விளக்கமளிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 16 யூலை 2013, 02:36.34 AM GMT ]
இலங்கையில் நிரந்தர சமாதானம் ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கைக்கு எதிராக எந்த நாடுகளும் அந்ததந்த நாடுகளின் பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கையை விடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அமெரிக்கா, பிரித்தானிய மற்றும் அவுஸ்திரேலியா போன்ற முக்கிய நாடுகளுக்கு அந்த நாட்டில் உள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகரகத்தின் ஊடாக விளக்கமளிக்க நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிராக பிரித்தானியா, மற்றும் அவுஸ்திரேலியா என்பன அந்த நாட்டு பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்திருந்தமையை தொடர்ந்தே அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
எவ்வாறாயினும் குறித்த நாடுகளின் பயண எச்சரிக்கையில், இலங்கையில் யுத்த சூழ்நிலை குறித்த எச்சரிப்புகள் எவையும் விடுக்கப்பட்டிருக்கவில்லை.
மாறாக, திட்டமிடப்படாத ஆர்ப்பாட்டங்கள், மத மற்றும் இன ரீதியான வன்முறைகள், பாலியல் துஸ்பிரயோகங்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் போன்றவை தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறே வலியுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten