தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 juli 2013

இலங்கையில் கடத்தப்பட்ட ஜேர்மன் யுவதி - புலனாய்வு தகவல்களை திரட்டிய ஜேர்மனிய பிரஜை தப்பியோட்டம்

விமானப் படையின் தேவைகளுக்காக வலி.வடக்கில் சுண்ணாம்புக் கல் அகழ்வு! வழக்கு தாக்கல் செய்ய கூட்டமைப்பு தீர்மானம்
[ திங்கட்கிழமை, 29 யூலை 2013, 02:15.26 AM GMT ]
வலி.வடக்கில் விமானப் படைக்கு சொந்தமான பகுதி என்று பெயரிடப்பட்டு தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் சுண்ணாம்புக்கல் அகழ்வினால் அப்பகுதியில் உள்ள கிராமங்களில் குடிநீர் உவர்நீராக மாற்றமடைந்து வருவதாக தெரியவந்துள்ளது.
மேற்படிச் சுண்ணாம்புக்கல் அகழ்விற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள வலி.வடக்குப் பிரதேச சபை, இவ்விடயம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யவுள்ளது என்று வலி.வடக்குப் பிரதேச சபை உப தவிசாளர் எஸ்.சஜீவன் தெரிவித்துள்ளார்.
1990 ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த வலி.வடக்கு கடந்த 3 வருடங்களாக பகுதி பகுதியாக மீள்குடியேற்றம் செய்யப்பட்டு வருகின்றது. இருப்பினும் இன்னமும் முழுமையான மீள்குடியேற்றம் அங்கு நடைபெற்றவில்லை.
இதுவரைக்கும் விடுவிக்கப்படாத 23 கிராமசேவகர் பிரிவினையும் இராணுவத்தின் தேவைக்காக சுவிகரிக்கப்படவுள்ளதாக அறிவித்தவர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அவ்வறிவித்தல்களை காணி அமைச்சரும் ஏற்றுக் கொண்டு நிச்சயமாக வலி.வடக்குப் பகுதியில் தற்போது இராணுவத்தின் கட்டுப்ப்hட்டின் கீழ் உள்ள பொது மக்களுடைய நிலங்கள் சுவீகரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கீரிமலைப் பகுதியில் பெருமளவான சுண்ணாம்புக் கற்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டு, அங்கு பெரிய கல்லுடைக்கும் இயந்திரத்தின் மூலம் கற்கள் அரைக்கப்பட்டு சல்லிகளாக மாற்றப்படுகின்றது. இதனால் அப்பகுதியில் பாரிய குழிகள் காணப்படுகின்றது.
மேலும் மாவட்டபுரத்தில் இருந்து கீரிமலைக்குச் செல்லும் பாதையின் இருமருங்கிலும் அகழப்பட்ட சுண்ணாம்புக்கற்கள் குவிக்கப்பட்டுள்ளது. கற்கள் குவிக்கப்பட்ட இடங்களில் இது சிறிலங்கா விமானப்படைக்குச் சொந்தமானது என அறிவுறுத்தல் பலகையும் நாட்டிவைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தொடர்ச்சியாக செய்யப்பட்டுவரும் சுண்ணாம்புக்கல் அகழ்வினால் அதனை அண்மித்த பகுதிகளான கொல்லங்கலட்டி, கருவப்பானை, நகுலேஸ்வரம், பன்னாலை போன்ற கிராமங்களில் உள்ள கிணற்று நீர் உவர் நீராக மாற்றமடைந்து வருகின்றது.
இவ்விடயம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தினால் சுற்றுச் சூழல் அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
மேலும் அப்பகுதியில் நடைபெறும் சுண்ணாம்புக்கல் அகழ்விற்கு எதிர்ப்புத் தெரிவித்து வலி.வடக்குப் பிரதேச சபைக் கூட்டத்தில் கண்டனத் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆயினும் சுண்ணாம்புக்கல் அகழும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது.
இதனால் எதிர்வரும் காலங்களில் மேற்குறித்த கிராமங்களின் குடிநீர் உவர் நீராகா மாற்றமடைவதுடன், அப்பகுதியில்ன விவசாய நடவடிக்கைகளும் முற்றாகப் பதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே இவ்விடயம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் கடத்தப்பட்ட ஜேர்மன் யுவதி - புலனாய்வு தகவல்களை திரட்டிய ஜேர்மனிய பிரஜை தப்பியோட்டம்
[ திங்கட்கிழமை, 29 யூலை 2013, 06:07.21 AM GMT ]
இலங்கைக்கு வருகைதந்திருந்த ஜேர்மன் யுவதியை கடந்த 10 தினங்களாக காணவில்லை என்று கல்கிஸை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 
குறித்த யுவதி ஐந்து மாதங்களுக்கு முன்னர் இலங்கைக்கு சென்றுள்ளார்.
தன்னுடைய மகளை கடத்தி சென்றிருக்கலாம் என தாயார் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
குறித்த யுவதியை கடத்தியதாக சந்தேகிக்கப்படும்  நபரின் பெயரையும் தாய் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் புலனாய்வு தகவல்களை திரட்டிய ஜேர்மனிய பிரஜை தப்பியோட்டம்
மிரிஹான பொலிஸின் குடிவரவு குடியல்வு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜெர்மனிய பிரஜை அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார். 
முஸ்லிம் பெயரில் இலங்கையில் தங்கியிருந்து, வெளிநாட்டு புலனாய்வு சேவைகளுக்கு தகவல்களை வழங்குவதற்காக இலங்கை சென்றிருந்தாக சந்தேகத்தின் பேரில் அரச புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார். 
தப்பிச் சென்ற நபர் தொடர்பில் அரச புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 
கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் கடந்த 23 ஆம் திகதி கைது செய்யப்பட்ட இந்த ஜெர்மனிய பிரஜை மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். 
பொலிஸாரின் பாதுகாப்பு பொறுப்பின் கீழுள்ள முகாமிலிருந்த குறித்த நபர், கடந்த 24 ஆம் திகதி அதிகாலை தப்பிச் சென்று விட்டதாக அரச புலனாய்வு பிரிவின் தகவல்கள் தெரிவித்தன. 
அலி ஷாகி சதாம் என்ற முஸ்லிம் பெயரில் இலங்கையில் தங்கியிருந்த இந்த ஜெர்மனிய பிரஜை, அரசசார்ப்றற நிறுவனம் ஒன்றின் ஊடாக இலங்கை சென்று புலனாய்வு தகவல்களை திரட்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். 
கைது செய்யப்பட்டு, நடு கடத்துவதற்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த போதே இந்த நபர் தப்பிச் சென்றுள்ளார். 
அதேவேளை ஏற்கனவே, ஊடகவியலாளர்கள் போல், இலங்கையில் புலனாய்வு தகவல்களை திரட்டி வந்த இரண்டு பாகிஸ்தான் பெண்கள், அரச புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு, மிரிஹான தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த போது, அங்கிருந்து தப்பிச் சென்றனர். 
அவர்களும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை. இந்த நிலையில், நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நபர்களை நடு கடத்தும் வரை தடுத்து வைக்கும் மிரிஹான தடுப்பு முகாமில் பாதுகாப்பு தொடர்பில் சிக்கல்கள் எழுந்திருப்பதாக புலனாய்வு பிரிவினர் தெரிவிக்கின்றனர். 

Geen opmerkingen:

Een reactie posten