தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 juli 2013

நவநீதம்பிள்ளை இலங்கைக்கு வரலாம்! ஆனால் வாய் திறக்கக் கூடாது: தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் நிபந்தனை!

வடக்கில் முஸ்லிம் கூட்டணி த.தே.கூட்டமைப்புடன் இணைந்து போட்டி
[ திங்கட்கிழமை, 29 யூலை 2013, 10:29.31 AM GMT ]
எதிர்வரும் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான முஸ்லிம் கூட்டணி மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுகிறது.
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான முஸ்லிம் கூட்டணி சார்பாக அஷெய்க் அய்யூப் அஸ்மி (நளீமி) போட்டியிடுகிறார். அவர் நேற்று பிற்பகல் வேட்பு மனுவில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான முஸ்லிம் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் நஜா முஹம்மத்,
தமது கூட்டணியின் வேட்பாளர் யாழ்ப்பாணத்தில் போட்டியிட இருந்த போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் யாழில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான இட ஒதுக்கீடு செய்வதில் உள்ள சிக்கல் காரணமாகவே மன்னார் மாவட்டத்தில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டதாக கூறினார்.
நவநீதம்பிள்ளை இலங்கைக்கு வரலாம்! ஆனால் வாய் திறக்கக் கூடாது: தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் நிபந்தனை
[ திங்கட்கிழமை, 29 யூலை 2013, 09:39.07 AM GMT ]
நவநீதம்பிள்ளை இலங்கைக்கு வரலாம், வெளியில் சென்று வாயை திறக்கக் கூடாது என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளர் மருத்துவர் வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவானது சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அமைப்பாகும். அதன் ஆணையாளர் என்ற வகையில், நவநீதம்பிள்ளை இலங்கை வருவதையோ, அரசாங்கம் உட்பட அரசியல் தலைவர்களை சந்திப்பதையோ, பேச்சுவார்த்தைகளை நடத்துவதையோ நாம் எதிர்க்கவில்லை.
ஆனால், யுத்தம் இடம்பெற்ற இடங்களுக்குச் சென்று மக்களைச் சந்திப்பது விசாரணைகளை நடத்துவதை அனுமதிக்க முடியாது. விசாரணைகளை நடத்துவதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கவில்லை.
அத்துடன் விசாரணைகளை நடத்தி மனித உரிமை ஆணைக்குழுவின் மாநாட்டில் அறிக்கையை சமர்பிக்க முடியாது, அதற்கான அதிகாரம் அவருக்கில்லை.
இலங்கை அரசாங்கத்தின் அனுமதியை மீறி அவர் செயற்பட முடியாது. அதனையும் மீறி நவம்பரில் அறிக்கை சமர்ப்பிக்க முயற்சித்தால், அரசாங்கம் நேச நாடுகளின் ஆதரவுடன் அதனை எதிர்க்க வேண்டும்.
இலங்கை வரும் அவர், ஊடகவியலாளர் மாநாடு நடத்தக்கூடாது. ஐ.நா. வுக்கு உத்தியோகபூர்வ அறிக்கையும் சமர்ப்பிக்கக்கூடாது. இங்கு வரலாம். அரசியல் தலைவர்களை சந்திக்கலாம். பேச்சுவார்த்தைகளை நடத்தலாம். ஆனால், வெளியில் வாயை திறக்கக்கூடாது என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten