தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 juli 2013

வடக்கு மக்கள் தமிழர்களின் பலத்தை நிரூபித்து காட்ட வேண்டும்: பேராசிரியர் எம். ராஜேஸ்வரன்

லைட்களை பொருத்தாத துவிச்சக்கர வண்டிகள் பொலிஸாரின் கையில்!- சிறைச்சாலைகளில் சீ.சீ.டி.வி கமரா பொருத்த தீர்மானம்
[ திங்கட்கிழமை, 29 யூலை 2013, 02:52.38 AM GMT ]
மட்டக்களப்பு மாவட்டத்தில் துவிச்சக்கரவண்டியில் செல்வோர் டைனமோ பொருத்திய லைட்களை பொருத்தியிருக்கவேண்டும் என பொலிஸார் அறிவித்துள்ளனர். 
மட்டக்களப்பில் தமிழ் பகுதிகளில் டைனமோ பொருத்திய லைட்களை பொருத்தாத துவிச்சக்கர வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு வண்டிகளில் பொலிஸ் நிலையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட துவிச்சக்கர வண்டிகள் பிடிக்கப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு நகரம் மற்றம் களுவாஞ்சிகுடி உட்பட சில பகுதிகளிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இரவு வேளைகளில் தனியார் வகுப்புகளுக்கு செல்லும் மாணவர்களின் துவிச்சக்கர வண்டிகள் கூட பறிக்கப்பட்டதன் காரணமாக இரவு வேளைகளில் மாணவிகள் உட்பட தூர இடத்துக்கு செல்லும் மாணவர்கள் பெரும் அசௌகரியங்களுக்குள்ளாகினர்.
பொலிஸார் எதுவித முன்னறிவித்தலும் இன்றி இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அத்துடன் இவ்வாறான நடவடிக்கைகள் தமிழ் பிரதேசங்களில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பெற்றோர் விசனம் தெரிவித்துள்ளனர்.
சிறைச்சாலைகளில் சீ.சீ.டி.வி கமரா பொருத்த தீர்மானம்
சிறைச்சாலைகளில் சீ.சீ.டி.வி கமரா பொருத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிறைச்சாலைகளில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கில் இவ்வாறு பாதுகாப்பு கமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
சீ.சீ.டி.வி. கமராக்களின் மூலம் சிறைச்சாலை நடவடிக்கைகளை கண்காணிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு மகசீன் மற்றும் குருவிட்ட சிறைச்சாலைகளில் முதல் கட்டமாக சீ.சீ.டி.வி. கமராக்கள் பொருத்தப்படவுள்ளன.
கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்களை கண்டறிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் சிறைச்சாலையில் இடம்பெற்று வரும் பல்வேறு குற்றச் செயல்களை தடுக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மக்கள் தமிழர்களின் பலத்தை நிரூபித்து காட்ட வேண்டும்: பேராசிரியர் எம். ராஜேஸ்வரன்
[ திங்கட்கிழமை, 29 யூலை 2013, 01:46.00 AM GMT ]
தமிழ் மக்களின் இதயத்துடிப்பை இந்தியாவும் சர்வதேச சமூகமும் அறிந்து கொள்ள வடக்கு மாகாண சபை தேர்தல், களம் அமைத்து கொடுத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பேராசிரியர் எம். ராஜேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் வாழும் சகல தமிழ் மக்களும், கூட்டமைப்பிற்கு பின்னால் அணித்திரண்டு தமிழர்களின் பலத்தை நிரூபித்து காட்ட வேண்டும். இது காலத்தின் தேவை.
போர் நடைபெற்ற காலத்தில் புலிகள் ஆயுதரீதியில் பலமாக இருந்தனர். இதனால் இன்றைய ஜனாதிபதி, போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக, தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்க 13 பிளஸ் ஆக அதிகரித்து, மாகாண சபையை பலமிக்க சபையாக மாற்ற வேண்டும் எனக் கூறினார்.
ஆனால் மாகாண சபைகள் காணி, பொலிஸ் அதிகாரங்கள் இன்றி குறைமாத குழந்தைகள் போல் உள்ளன.
இந்த குறைமாத குழந்தையையும் அழித்து விட வேண்டும் என்று அமைச்சர் விமல் வீரவன்ஸ, ஜாதிக ஹெல உறுமய கட்சித் தலைவர்கள் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றனர்.
இதன் மூலம் அரசாங்கத்தின் உண்மையான முகம் என்ன என்பது புலனாகியுள்ளது என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten