எந்தக் கட்சியாக இருப்பினும் மக்களுக்காக ஒன்றுபட வேண்டும் என்ற கோரிக்கையில் முன்னாள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் உறுப்பினர் மூவர் யாழ்ப்பாணம் தந்தை செல்வா நினைவுச் சதுக்கத்தில் இன்று காலை 9 மணிதொடக்கம் உண்ணாவிரதப் போரட்டத்தை முன்னெடுத்துள்ளனர்
மேலும் குடும்ப அரசியலை தமிழ் அரசியலுக்குள் கொண்டு வர வேண்டாம், கட்சி அரசியலை விட்டு விடுங்கள், சாதிப் பிரிவுகளும் வேண்டாம், யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுதும் முஸ்ஸிம் பிரதிநிதியொருவர் வேண்டும் என்ற கோரிக்கைகளையும் முன்வைத்தே மாலை 6 மணிவரை உண்ணாவிரதப் போரட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
அதன்படி தங்க முகுந்தன் (முன்னாள் யாழ் மாநகரசபை உறுப்பினர்) , செல்லன் கந்தையன் ( முன்னாள் மாநகரசபை மேயர் ), செல்லையா விஜயரட்ணம் (முன்னாள் மாநகரசபை உறுப்பினர்) ஆகியோரே இந்தப் போராட்டத்தினை நடாத்தி வருகின்றனர்.
இதேவேளை, வடமாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று தமிழரசுக் கட்சி வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ள நிலையில் இந்த உண்ணாவிரதப் போரட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உண்ணாவிரதத்தை விலக்க சங்கரி அழைப்பு!!
உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வரும் மூவரும் உடனடியாக அதனை நிறுத்த வேண்டும் எனவும் அவ்வாறு நிறுத்தாவிடின் இந்த மூவரும் இனிவரும் காலங்களில் கட்சிக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர்கள் மூவர் மேற்கொண்டு வருகின்ற உண்ணாவிரதப்பேராட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தான் அவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் வீரசிங்கம் ஆனந்தசங்கரி தெரிவிததுள்ளார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர்கள் மூவர் யாழ். தந்தை செல்வா சதுக்கத்தின் முன்பாக இன்று திங்கட்கிழமை காலையிலிருந்து உண்ணாவிரதம் இருந்துவருகின்றனர். இந்த மூவருடனும் தொலைபேசியில் தொடர்பு கொண்ட தான் உண்ணாவிரதத்தை நிறுத்துமாறு தெரிவித்துள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்தசங்கரி கூறியுள்ளார்.அத்துடன் இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கும் கட்சிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே யாழ்.மாநகர சபையின் முன்னாள் முதல்வர் செல்லன் கந்தையன் மற்றும் முன்னாள் உறுப்பினர்கள் இருவரே இப்போராட்டத்தினில் குதித்துள்ளனர்.கூட்டமைப்பிற்கான வேட்பாளர் தெரிவினில் சாதிய அடிப்படையினில் வெற்றி பெற ஏதுவாக ஆட்தெரிவு இடம்பெற்றதை கண்டித்தே இவ்வடையாள உண்ணாவிரதப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten