தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 juli 2013

இலங்கையை அடிபணிந்த நாடாக மாற்ற இந்தியா ரோ அமைப்பின் ஊடாக வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு

இந்தோனேசிய தடுப்பு முகாமிலிருந்து இலங்கை பிரஜைகள் உட்பட 06 பேர் தப்பியோட்டம்
[ சனிக்கிழமை, 27 யூலை 2013, 08:19.32 AM GMT ]
இந்தோனேசிய தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று இலங்கை பிரஜைகள் உட்பட 06 பேர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
அந்த முகாமில் 66 பேர் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை நேற்று கணக்கிட்ட போது, அங்கிருந்த 06 பேர் தப்பிச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
தப்பிச் சென்றவர்களில் மூன்று ஈரான் பிரஜைகளும் அடங்குகின்றனர்.
அவர்கள் எங்கு தப்பிச் சென்றுள்ளனர் என்பது பற்றிய தகவல்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக கடல் வழியாக பயணித்த போது, கைது செய்யப்பட்டவர்களே மேற்படி முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இலங்கையை அடிபணிந்த நாடாக மாற்ற இந்தியா ரோ அமைப்பின் ஊடாக வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு
[ சனிக்கிழமை, 27 யூலை 2013, 08:53.59 AM GMT ]
இலங்கையை தனக்கு அடிபணிந்து நடக்கும் நாடாக மாற்றுவதற்கு இந்தியா தனது புலனாய்வு சேவையான �ரோ� அமைப்பின் ஊடாக தந்திரமான முறையில் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இலங்கை முழுவதும் 64 கோயில்களை நிர்மாணிப்பதே ரோ அமைப்பின் முதல் நோக்கமாகும்.
இது தொடர்பில் ஆராய இலங்கை சென்றிருந்த ரோ அமைப்பின் தலைவர் ஒருவர், இலங்கையில் உள்ள மதத் தலைவர்களையும் சில வர்த்தகர்களையும் சந்தித்து பேசியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த திட்டத்திற்கு பல கோடி ரூபா பணத்தை செலவிட ரோ புலனாய்வு சேவை தயாராக உள்ளது.
அத்துடன் பிரிவினைவாதத்தை வளர்ச்சியடைய செய்து, ஈழத்திற்கு ஏதுவான சூழ்நிலையை ஏற்படுத்தி, இந்தியாவின் அரசியல் தேவைக்கு அமைய இலங்கையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதே ரோ அமைப்பின் நோக்கம் என அந்த தகவல்கள் தெரிவித்தன.

Geen opmerkingen:

Een reactie posten