தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 31 juli 2013

அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோரும் இலங்கை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி?

யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே மோதல்
[ புதன்கிழமை, 31 யூலை 2013, 09:13.21 AM GMT ]
யாழ். பல்கலைக்கழகத்தில் இரு மாணவர் குழுக்களுக்கிடையே இன்று நண்பகல் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
யாழ். பல்கலைக்கழகத்தில் கலைப் பீடத்தில் கல்வி பயிலும் மூன்றாம் வருட மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கு இடையே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.
இம்மோதல் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிய வருகின்றது. அத்துடன் மோட்டார் சைக்கிள்கள் இரண்டும் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இம்மோதல் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோரும் இலங்கை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி?
[ புதன்கிழமை, 31 யூலை 2013, 09:36.30 AM GMT ]
வெளிநாடு சென்ற சபரகமுவ மாகாணத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் நாடு திரும்பாதது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்ட அதிகாரி அந்த நாட்டிலேயே தங்கியுள்ளதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்த அதிகாரி கடந்த மாதம் 29 ஆம் திகதி வெளிநாடு சென்றுள்ளார். அவர் அவுஸ்திரேலியாவில் கல்வி பயிலும் தனது மகனை பார்ப்பதற்காக செல்ல பொலிஸ் திணைக்களத்திடம் விடுமுறை பெற்றிருந்தாக கூறப்படுகிறது.
அந்த அதிகாரி பெற்றிருந்த விடுமுறை இந்த மாதம் 10 ஆம் திகதியுடன் முடிவடைந்தது. எனினும் அன்றைய தினம் அவர் இரத்தினபுரி பொலிஸ் பிரிவுக்கு கடைமைக்கு சமூகமளித்திருக்கவில்லை.
இதனையடுத்து அவருக்கு வழங்கப்பட்டிருந்த உத்தியோபூர்வ வாகனம் கடந்த 16 ஆம் திகதி திரும்பபெறப்பட்டது.
நாடு திரும்பவில்லை எனக் கூறப்படும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி சில காலம் பொலிஸ் ஊடகப் பிரிவில் பணியாற்றி வந்தார்.
அப்போது, பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவர் வெளியிட்டிருந்தார். இதனால் அவருக்கு அரசியல் ரீதியாக அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இவற்றை அடிப்படையாக கொண்டு இந்த அதிகாரி அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்து அரசியல் தஞ்சம் கோரியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் அந்த அதிகாரி காணாமல் போய்விட்டதாக கூறியே பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Geen opmerkingen:

Een reactie posten