தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 juli 2013

நவநீதம்பிள்ளையின் சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரி, கிழக்கு கடற்படை தளபதியுடன் சந்திப்பு

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால் மாவில் நச்சுப் பதார்த்தம்
[ வெள்ளிக்கிழமை, 26 யூலை 2013, 04:24.43 PM GMT ]
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால் மா வகைகளில் நச்சுப் பதார்த்தம் அடங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
டைசடையனமைடைஸ் (DCD) என்னும் நச்சுப் பதார்த்தம் குறித்த பால் மாவில் கலந்திருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளதாக விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் அணுச்சக்தி அமைச்சின் தொழில்நுட்ப நிறுவனம் அறிவித்துள்ளது.
குறித்த பால் மா வகையில் நச்சுப் பதார்த்தம் கலந்துள்ளமை தொடர்பில் சுகாதார அமைச்சு, நுகர்வோர் அதிகாரசபை மற்றும் சுங்கத் திணைக்களம் ஆகியவற்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு வகையான பால் மா வகைகளில் இவ்வாறு நச்சுப் பதார்த்தம் கலந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நவநீதம்பிள்ளையின் சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரி, கிழக்கு கடற்படை தளபதியுடன் சந்திப்பு
[ வெள்ளிக்கிழமை, 26 யூலை 2013, 04:13.12 PM GMT ]
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரி இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டு பேச்சுக்களை நடத்தியுள்ளார் 
நவநீதம்பிள்ளைக்கு வருகைக்கு முன்னர் இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது.
ஆபிரகாம் மாத்தாய் என்ற அந்த அதிகாரி தலைமையிலான குழுவினர், கிழக்கு கடற்படை தளபதி ரியர் அட்மிரல் ரொஹான் அமரசிங்கவை சந்தித்து உரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு திருகோணமலையில் உள்ள கடற்படை தளத்தில் நடைபெற்றது.
உலகளாவிய ரீதியில் நவநீதம்பிள்ளையின் பாதுகாப்பு விடயங்களில் மாத்தாயும் அவரது குழுவினரும் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சேவைகளிலும் பணியாற்றியுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten