தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 24 juli 2013

மட்டு. குற்றச் செயல்கள் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் விசாரணை

சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை!
[ புதன்கிழமை, 24 யூலை 2013, 02:04.26 PM GMT ]
வீசா காலம் முடிவடைந்த நிலையில் நாட்டுக்குள் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களைக் கைது செய்வதற்கான பாரிய வேலைத்திட்டமொன்றை குடிவரவு குடியகல்வுத் திணைக்களம், தேசிய புலனாய்வுப் பிரிவு, இலங்கை பொலிஸ் திணைக்களம் ஆகியன இணைந்து முன்னெடுத்துள்ளது.
இவ்வாறானவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருவதாக திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் சூலானந்த பெரேரா தெரிவித்தார்.
இவர்கள் சட்டவிரோதமாக நாட்டில் தொடர்ந்தும் தங்கியிருந்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதும், தொழில் புரிவதிலும்
ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிய வந்துள்ளன.
அதற்கமையவே இவர்களைக் கைது செய்து நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சுற்றுலா வீசாவில் இலங்கைவந்த இவர்கள் தொழில் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை வடக்கு, கிழக்கு மாகாணங்களிலேயே தங்கியிருந்து வயல் வேலைகளில் ஈடுபடுவதுடன், சிலர் புடவை வியாபாரத்தினையும் மேற்கொள்வதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக சிறிவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.
எனவே இவர்களை கைது செய்யும் நடவடிக்கையை பொலிஸ் திணைக்களம் அந்தந்த பொலிஸ் நிலையங்களின் ஊடாக மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மட்டு. குற்றச் செயல்கள் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் விசாரணை
[ புதன்கிழமை, 24 யூலை 2013, 02:37.54 PM GMT ]
கடந்த காலங்களில் இடம்பெற்று வந்த குற்றச் செயல்கள் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் நாலாபக்கமும் இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவு பொதுமக்களிடமும் அரச அதிகாரிகளிடமும் துருவித் துருவி விசாரணைகளை மேற்கொண்டு வரகின்றது.
கடந்த யுத்தகாலத்தின் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதி இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் அமைந்திருந்தது.
அப்போது அப்பகுதியில் பல பெண்கள் மத்தியில் துஸ்பிரயோகங்களும் அடாவடித்தனங்களும் இனந்தெரியாத நபர்கள் என்ற போர்வையில் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இவைகள் இடம்பெற்று தற்போது வருடக்கணக்காக ஆகியுள்ளன.
இந்நிலையில் தற்போது இலங்கை இராணுவத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கிராமங்கள் தோறும் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதனால் குறித்த பகுதியில் உள்ள மக்களிடையே ஒருவித மனக்கிலேசம் ஏற்பட்டுள்ளதோடு அச்ச உணர்வும் அம்மக்களிடையே காணப்படுகின்றது.

Geen opmerkingen:

Een reactie posten