தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 24 juli 2013

இலங்கையின் இறுதிப் போரில் சர்வதேசம் தனது கடமையை சரிவர நிறைவேற்றவில்லை: அமெரிக்காவின் புதிய அறிக்கை

ரணில் விக்ரமசிங்க சர்வதிகாரியாக செயற்படுகிறார்: தயாசிறி- தேசிய பிரச்சினைத் தீர்வுக்கு ஜே.வி.பியின் யோசனைகள்
[ புதன்கிழமை, 24 யூலை 2013, 12:27.51 PM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியை வளர்ச்சி பாதையில் இட்டுச் செல்ல எடுத்த முயற்சிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க உதவியளிக்கவில்லை என அந்த கட்சியில் இருந்து விலகி ஆளும் தரப்புக்கு தாவிய தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றத்தில் 40 நிமிடம் விசேட உரையொன்றை ஆற்றும் போது அவர் இதனை கூறினார். அவர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில்,
கட்சியை வளர்ச்சி பாதையில் இட்டுச் செல்லு முயற்சிகளுக்கு ரணில் விக்ரமசிங்க உதவியளிக்க வில்லை என்பதுடன், சர்வாதிகாரியாக செயற்பட்டு கட்சியை அழித்து வருகிறார்.
இன்னும் 10 வருடங்களாவது, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியே நாட்டில் அதிகாரத்தில் இருக்க போகிறது.
நான் ஜனநாயகத்தை தேடி போகிறேன். என்னால் அரசாங்கத்தில் அமைச்சு பதவி ஒன்றை பெற்றிருக்க முடியும். ஆனால் அப்படி செய்ய போவதில்லை. வடமேல் மாகாண சபைத் தேர்தலில் ஆளும் கட்சியின் சார்பில் போட்டியிட போகிறேன்.
கடந்த பொதுத் தேர்தலில் ஒரு லட்சத்தும் மேல் வாக்குகளை பெற்றேன். இம்முறை வெற்றிப் பெறுவதை எதிர்க்கட்சித் தலைவர் பார்க்க முடியும். ஐக்கிய தேசியக் கட்சியை கட்டியெழுப்ப முன்னெடுத்த போராட்டங்களினால் பிரயோசனம் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவித்தார்.
இதனையடுத்து உரையாற்றிய ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ,
தயாசிறி தனது அரசியல் புதைக்குழியை தானே தோண்டி கொண்டார். இன்று நாம் அவரது அரசியல் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டிருக்கின்றோம் என்றார்.
இனப்பிரச்சினையைத் தீர்க்க ஜே.வி.பியின் தீர்வுத் திட்டம் வெளியீடு
ஜே.வி.பியினால் தயாரிக்கப்பட்டுள்ள தேசியப் பிரச்சினையை தீர்ப்பதற்கான பிரவேசம் என்ற யோசனைகள் அடங்கிய தீர்வு திட்டம் அடங்கிய பொதி இன்று முற்பகல் கொழும்பு- 7 இலங்கை மன்ற கல்லூரியில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
நாட்டின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வை நோக்கிய திசைக்கு செல்லும் யோசனைகளாக இலங்கை மக்களும் முன் இந்த தீர்வு யோசனை பொதியை முன்வைப்பதாக ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க தெரிவித்தார்.
அதனை வெளியிட்டு வைத்து உரையாற்றும் போது, அவர் இதனை கூறினார்.
இந்த நிகழ்வில், ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, பிரசார செயலாளர் விஜித ஹேரத், மத்திய செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகர் உட்பட கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதனை தவிர கலைஞர்கள், வெகுஜன அமைப்புகள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
இலங்கையின் இறுதிப் போரில் சர்வதேசம் தனது கடமையை சரிவர நிறைவேற்றவில்லை: அமெரிக்காவின் புதிய அறிக்கை
[ புதன்கிழமை, 24 யூலை 2013, 01:23.46 PM GMT ]
இலங்கையில் நடைபெற்ற போரின் இறுதிக்கட்ட காலங்களில் அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகள், இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் எதிராக அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டு வந்தன என்று அமெரிக்காவின் புதிய அறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் ராஜாங்க செயலாளர் மெட்லின் அல்பிரைட் தலைமையிலான 3 அமெரிக்க நிறுவனங்கள் நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சர்வதேசம், இலங்கையில் போரை நிறுத்துவதற்கோ, அதற்குரிய பொறுப்புகளை நிறைவேற்றவோ நடவடிக்கை எடுக்கவில்லை.
தஞ்சம் வழங்குவது, உரிமைகளை பாதுகாப்பு தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாடுகளை பல நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. ஆனால் அவற்றை அமுல்படுத்துவதில்லை.
முக்கியமாக இலங்கையில் நடைபெற்ற போரின் இறுதிக் கட்டத்தில் சர்வதேசம் தமது கடமையை சரிவர நிறைவேற்றவில்லை என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten