தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 17 juli 2013

இலங்கைக்கு ஆயுத ஏற்றுமதி: பிரித்தானிய பா.உறுப்பினர்கள் அதிருப்தி

பிரதேசசபைத் தலைவரின் மகன் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மாணவர் காயம்
[ புதன்கிழமை, 17 யூலை 2013, 02:48.26 AM GMT ]
ஆளும் கட்சியின் பிரதேச சபைத் தலைவர் ஒருவரின் மகன் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மாணவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
லக்கல பிரதேச சபையின் தலைவரது மகனே இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
இந்த சம்பவத்தில் எட்டு வயதான பாடசாலை மாணவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த மாணவர் பல்லேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு குழுக்களுக்கு இடையிலான மோதல் சம்பவமொன்றின் போது பிரதேச சபை தலைவரின் மகன் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
லெஸ்லி கன்னங்கர என்ற நபரே இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய நபரையும் மற்றுமொருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
காயமடைந்த மாணவர் மேலதிக சிகிச்சைக்காக மாத்தளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு ஆயுத ஏற்றுமதி: பிரித்தானிய பா.உறுப்பினர்கள் அதிருப்தி
[ புதன்கிழமை, 17 யூலை 2013, 02:36.32 AM GMT ]
இலங்கைக்கு ஆயுத ஏற்றுமதி அனுமதி பத்திரம் வழங்கப்பட்டமை தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவர் சேர் ஜோன் இஸ்டேன்லி இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை மீது பாரிய மனித உரிமை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள போதும், அதனை பொருட்படுத்தாது இந்த அனுமதிபத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி இலங்கை, பிரித்தானியாவிடம் இருந்து 3 பில்லியன் யூரோக்கள் பெறுமதியான ஆயுதங்களை இறக்குமதி செய்ய முடியும் என்ற தெரிவிக்கப்படுகிறது.
இதேபோன்று ஈரான், சீனா, இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கும் பிரித்தானிய ஆயுத ஏற்றுமதி அனுமதிகளை வழங்கியுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten