[ செவ்வாய்க்கிழமை, 16 யூலை 2013, 02:15.34 AM GMT ]
இலங்கை இராணுவ அதிகாரிகளான மேஜர் ஹரிஸ்சந்திர ஹெற்றியாராச்சி, விமானப்படையை சேர்ந்த விங்கொமாண்டர் பண்டார தசநாயக்க ஆகியோர் பாகிஸ்தானில் பயிற்சி பெறுவதற்காக கடந்த வார இறுதியில் அங்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இவர்களுக்கு பாகிஸ்தானில், பலுசிஸ்தான் மாகாணத் தலைநகரான குவேட்டாவில் உள்ள இராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
தமிழ்நாட்டில் இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, வெலிங்டனில் பயிற்சி பெற்று வந்த இந்த இரு அதிகாரிகளையும் புனே அல்லது செகந்திராபாத்தில் பயிற்சி பெறுவதற்கு இந்திய அரசாங்கம் ஏற்பாடு செய்தது.
எனினும் இந்தியாவின் இந்த வாய்ப்பை உதறித் தள்ளிவிட்டு இரு படை அதிகாரிகளையும் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச கொழும்புக்குத் திருப்பி அழைத்திருந்தார்.
இதையடுத்து, கொழும்பு வந்திருந்த பாகிஸ்தான் இராணுவத் தளபதி மூலம், இந்த இரு அதிகாரிகளுக்கும் குவேட்டாவில் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏசியோவின் அகதிகள் வழக்கின் முக்கிய ஆவணத்தை காணவில்லை
[ செவ்வாய்க்கிழமை, 16 யூலை 2013, 02:21.15 AM GMT ]
ஏசியோ எனப்படும் (Australian Security Intelligence Organisation ) அவுஸ்திரேலிய புலனாய்வு தரப்பினரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதி ஒருவர் தொடர்பிலான முக்கிய ஆவணம் ஒன்றை காணவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
ஏசியோவின் அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
சிறிகாந்தன் சண்முகராஜா என்ற 30 வயதுடைய இலங்கையர் கடந்த மூன்று வருடங்களாக அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அகதி அந்தஸ்த்து வழங்கப்பட்ட போதும், பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர் என்ற அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 52 அகதிகளில் அவரும் ஒருவராவார்.
இந்த நிலையில் அவரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் மொழி பெயர்க்கப்பட்ட பிரதி ஒன்றை காணவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
இது அவரை தொடர்ந்தும் தங்களின் பாதுகாப்பில் வைத்துக் கொள்வதற்காக ஏசியோ மேற்கொண்டுள்ள சூழ்ச்சி என்று அகதிகள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten