தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 19 juli 2013

இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் சீராவில்லை: பிரித்தானியா!

தேர்தலுக்கு முன் சுற்றறிக்கை வெளியீடு- ஊழல் மோசடிகளில் ஈடுபடுவோரை தேர்தலில் நிறுத்த வேண்டாம்: ட்ரான்பெரன்ஸி இன்டர்நெசனல்
[ வெள்ளிக்கிழமை, 19 யூலை 2013, 03:29.59 AM GMT ]
எதிர்வரும் தேர்தல் செயற்பாடுகளுக்கு அரசாங்க சொத்துக்களை பயன்படுத்தக்கூடாது என்று வலியுறுத்திய சுற்றறிக்கை ஒன்றை தேர்தல்கள் ஆணையாளர் நேற்று வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி, அமைச்சர்கள் மற்றம் திணைக்களங்களில் பிரதானிகளுக்கு இந்த சுற்றறிக்கையின் பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் காலங்களில் தேர்தல்கள் ஆணையாளருக்கு உள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இந்த சுற்றறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இவ்வாறான அரசாங்க சொத்துக்கள் கட்சிகளின் தேர்தல் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டிருந்தமையை கருத்தில் கொண்டே இந்த சுற்றறிக்கை முன்கூட்டியே வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தேர்தல் நடைபெறும் மாகாணங்களில் அரசாங்க அதிகாரிகளுக்கான பதவி நியமனங்கள், இடமாற்றங்கள் மற்றும் பதவி உயர்வுர்களை தேர்தல் நடைபெறும் காலப்பகுதியில் வழங்க கூடாது என்றும் இந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஊழல் மோசடிகளில் ஈடுபடுவோரை தேர்தலில் நிறுத்த வேண்டாம்: ட்ரான்பெரன்ஸி இன்டர்நெசனல்
ஊழல் மோசடிகளில் ஈடுபடுவோரை தேர்தலில் நிறுத்த வேண்டாம் என ட்ரான்பெரன்ஸி இன்டர்நெசனல் அமைப்பு, அரசியல் கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
வடமேல், வடக்கு மற்றும் மத்திய மாகாணசபைத் தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவின் போது ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கக் கூடாது.
கடந்த ஒராண்டு காலப்பகுதில் பிரதேச சபை மற்றும் மாகாணசபை அரசியல்வாதிகளில் 50க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டுள்ளார்கள்.
குற்றச் செயல்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளுக்கு சந்தர்ப்பம் வழங்குவது மக்கள் பிரதிநிதிகளை தெரிவதில் குழப்ப நிலைமையை ஏற்படுத்தும். இது நாட்டுக்கும் சமூகத்திற்கும் இழைக்கப்படும் துரோகமாகவே கருதப்பட வேண்டும்.
அரசியல்வாதிகளின் சொத்து விபரங்களை திரட்டி அவர்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என ட்ரான்பெரன்சி இன்டர்நெசனல் அமைப்பு கோரியுள்ளது.

இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் சீராவில்லை: பிரித்தானியா
[ வெள்ளிக்கிழமை, 19 யூலை 2013, 03:25.34 AM GMT ]
இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் இன்னும் சீராகவில்லை என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவின் பொதுநலவாய மற்றும் வெளிவிவகார திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல், ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் மனித உரிமைகள் சம்பந்தமான சாதக மற்றும் பாதக விடயங்கள் ஒருமித்தே இடம்பெற்றுள்ளன. எவ்வாறாயினும், கடந்த மே மாதம் ஜெனீவாவுக்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க வெளியிட்ட அறிவிப்புக்கள் வரவேற்கத்தக்கன.
அவர் சனல்-4 தொலைக்காட்சியின் காணொளிகள் தொடர்பில் அரசாங்கம் விசாரணை நடத்தும் எனவும், மேலும் பல நிலுவையில் உள்ள வழக்குகள் துரிதமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும், காணாமல் போனவர்கள் மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் குறித்த பெயர் விபரங்கள் வெளியாகும் என்றும் தெரிவித்திருந்தார்.
இவற்றை வரவேற்றுள்ள பிரித்தானியா, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை வருகின்றமை, வடமாகாணத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளமை என்பவற்றையும் வரவேற்றுள்ளது.
அதேநேரம், கடத்தப்பட்ட மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டதாக கூறப்படுகின்ற போதும், அவற்றை அறிந்துக் கொள்வதற்கான சுதந்திரம் இல்லை
கடந்த மாதங்களில் பாரிய அளவில் வடமாகாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் காணி அபகரிப்புகள் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பில் பொது மக்கள் கடந்த மே மாதம் 15ம் திகதி வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
இதற்கிடையில் அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யவதற்கான யோசனை ஒன்றை பாராளுமன்றத்தில் முன்வைத்திருந்தார்.
அத்துடன் மத்திய மலைநாட்டின் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனத்துக்காக போராட்டம் நடத்திய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் மீது, அரசாங்க தரப்பு கட்சி ஒன்றின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி இருந்தனர்.
இவ்வாறான மனித உரிமைகளுக்கு பாதகமான நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில் இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் தொடர்ந்தும் கவலைக்குறியதாகவே இருப்பதாக பிரித்தானிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten