தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 19 juli 2013

இராணுவ பட்டாலியன் ஒவ்வொன்றுக்கும் நவீன இராணுவ முகாம்!

வாஸ் குணவர்தனவின் விளக்கமறியல் நீடிப்பு
[ வெள்ளிக்கிழமை, 19 யூலை 2013, 06:49.40 AM GMT ]
கொலைக் குற்றம் சாட்டப்பட்ட சந்தேகநபரான முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தனவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
வாஸ் குணவர்த்தன உள்ளிட்ட 7 சந்தேகநபர்கள் எதிர்வரும் மாதம் 1ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர்கள் இன்று கொழும்பு மேலதிக நீதவான் மொஹமட் சகாப்தீன் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி குறித்து எழுந்த பிரச்சினையால் வழக்கு எதிர்வரும் முதலாம் திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பம்பலபிட்டி கோடீஸ்வர வர்த்தகர் சியாமின் கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான வாஸ் குணவர்த்தன இனங் காணப்பட்டு்ள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இராணுவ பட்டாலியன் ஒவ்வொன்றுக்கும் நவீன இராணுவ முகாம்
[ வெள்ளிக்கிழமை, 19 யூலை 2013, 03:35.45 AM GMT ]
இராணுவத்தின் ஒவ்வொரு பட்டாலியன் பிரிவுக்கும் தனித்தனியா நவீனமயப்படுத்தப்பட்ட இராணுவ முகாம்கள் அமைக்கப்படும் என்றும், அதற்கான காணி தெரிவு நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் என்று இராணுவ தளபதி ஜெகத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று வருடங்களாக இதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்காக பாரிய அளவில் காணி தேவைப்படுகிறது.
இந்த நிலையில் காணிகளை தெரிவு செய்து, அதனை இராணுவத்துக்கு பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கை அரசாங்கம் தொடர்ந்து மேற்கொள்ளும் என்று பாதுகாப்பு செயலாளர் தங்களுக்கு உறுதியளித்துள்ளார்.
இந்த காணிகளைக் கொண்டு ஒவ்வொரு பட்டாலியன் பிரிவுக்கும் தனித்தனியான முகாம்கள் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten