தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 19 juli 2013

நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட வேண்டும்: கரு ஜயசூரிய!

மேர்வின் சில்வாவிற்கு எதிரான ஒழுக்காற்று விசாரணை அறிக்கை ஜனாதிபதியிடம் இன்று கையளிப்பு
[ வெள்ளிக்கிழமை, 19 யூலை 2013, 03:06.31 AM GMT ]
அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு எதிரான ஒழுக்காற்று விசாரணை அறிக்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
ஜனாதிபதி தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இன்று மாலை கூடவுள்ளது. இதன் போது அமைச்சருக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.
மேலும் குற்றச் செயல்களில் ஈடுபட்ட உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
போதைப் பொருள் வர்த்தகம், பாலியல் வன்முறை, கொலை, கொள்ளை, சட்டவிரோத காணி அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் ஆளும் கட்சி அரசியல்வாதிகளுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன.

நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட வேண்டும்: கரு ஜயசூரிய
[ வெள்ளிக்கிழமை, 19 யூலை 2013, 03:16.01 AM GMT ]
நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது எதேச்சாதிகார ஆட்சி நீடித்து வருகின்றது. இந்த ஆட்சி முறைமையை முடிவுக்குக் கொண்டு வர கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட வேண்டும்.
நல்லிணக்க ஆணைக்குழுவில் அங்கம் வகித்தவர்கள் நாட்டை நேசிப்பவர்கள், அவர்களது பரிந்துரைகள் ஆக்கபூர்வமானவை. அவர்களினால் அறிக்கை வெளியிட முடியுமே தவிர வேறும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது.
அரசாங்கத்தினால் நியமிக்கப்படும் ஆணைக்குழுக்களுக்கு ஜனநாயக பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் இயலுமை கிடையாது.
அரசாங்கத்தினால் நியமிக்கப்படும் பல ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் வெளியிடப்படுவதில்லை.
அரசாங்கத்தின் எந்தவொரு பிரச்சினையையும் மூடி மறைப்பதற்கு ஆணைக்குழுக்கள் நியமிக்கப்படுகின்றன.
ஜனாதிபதியின் ஆட்சிக் காலத்தை நீடிக்குமாறு எவரும் கோரவில்லை.
அரசாங்கத்தின் தேவைக்காகவே ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
நாட்டின் ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது என கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten