தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 1 juli 2013

சிங்களவர்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்த வேண்டாம்: பொதுபல சேனா எச்சரிக்கை !

சிங்களவர்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்த வேண்டாம் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று கட்டுநாயக்காவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் உள்ள முஸ்லிம் மக்கள் தற்போது அவர்களின் இனத்தை கட்டியெழுப்பி, வர்த்தகம் உட்பட அனைத்து துறைகளிலும் மிகவும் சூட்சுமான முறையில் தமது விரிவுப்படுத்தலை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஊடாக உலக இஸ்லாமிய அடிப்படைவாத்திற்கு நாட்டை கொண்டு செல்ல அவர்கள் திட்டமிட்டுள்ளனர். எனவே சிங்களவர்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்த வேண்டாம்.
அத்துடன், முஸ்லிம் வர்த்தகத்தை பகிஷ்கரிக்குமாறும் முஸ்லிம் மருத்துவர்களை நிராகரிக்குமாறும் ஞானசார தேரர் இதன் போது கோரிக்கை விடுத்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten