இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்செல் ஜே சிசன், இலங்கை வெளியுறவு அமைச்சினால் விளக்கம் கோரலுக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்கா சுற்றுலா பயணிகளுக்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் விடுத்துள்ள பயண எச்சரிக்கை தொடர்பில் விளக்கம் கோரலுக்காகவே சிசன் அழைக்கப்பட்டுள்ளார்.
இதன்போது மிச்செல் சிசனிடம், குறித்த எச்சரிக்கை விடுத்தமை தொடர்பில் விளக்கம் கோரப்படும் என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சை கோடிட்டு இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு பயணம் செய்யும் அமெரிக்கர்கள் உட்பட்ட வெளிநாட்டவர்கள், வாய்மூலமாக, உடல் ரீதியாக பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
எனவே வெளிநாட்டவர்கள் குறிப்பாக பெண்கள், இலங்கையின் ஏனைய பயணிகளுடன் பஸ்களில் பயணம் செய்யும் போது கவனமாக பயணிக்க வேண்டும்.
இலங்கையில் இனவன்முறைகள் தொடர்கின்றன. அத்துடன் வெளிநாட்டு பயணிகள் கண்காணிக்கப்படுகின்றனர் போன்ற விடயங்கள் அமெரிக்க எச்சரிக்கையில் அடங்கியிருந்தன.
Geen opmerkingen:
Een reactie posten