தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 1 juli 2013

ஓட்டமாவடி- பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் மைதானத்தில் திடீரென முளைத்த புத்தர் சிலை

நாடுகடந்த அரசியலும் தமிழீழமும்: கனடா பெற்னா தமிழ் விழா நிகழ்வரங்கில் உபமாநாடு
[ திங்கட்கிழமை, 01 யூலை 2013, 12:38.38 PM GMT ]
நாடுகடந்த தமிழீழ அரசியிலும் தமிழீழமும் எனும் தொனிப்பொருளில் கருத்தரங்கொன்று கனடாவில் இடம்பெறவுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செய்திக்குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட அமெரிக்க வாழ் தமிழ்மக்களின் பெருநிகழ்வாக ஆண்டுதோறும் இடம்பெற்று வரும் வட அமெரிக்க பேரவையின் தமிழ்விழாவின் உபநிகழ்வாக இக்கருத்தரங்கு இடம்பெறுகின்றது.
தமிழகத்தில் இருந்து பேராளர்கள் பலர் இக்கருத்தரங்கில் பங்கெடுத்துக் கொள்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 3 மணி முதல் 5 மணிவரை Hotel Novotel Toronto Centre, Alsace room, 45 The Esplanade, Toronto, M5E 1W2 எனும் முகவரியில் இக்கருத்தரங்கு இடம்பெறுகின்றது.
26வது ஆண்டாக இடம்பெறும் இப்பெருநிகழ்வானது, முதன்முறையாக கனேடிய மண்ணில் அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும் கனடியத் தமிழர் பேரவையும் இணைந்து வழங்கும் ஏற்பாடு செய்துள்ளன.
இதேவேளை இப்பெருநிகழ்வில் சனல் 4 தொலைக்காட்சியின் 'போர் தவிர்ப்பு வலையம்' ஆவணத்திரைப்படம் காண்பிக்கப்படுவதோடு, இயக்குனர் கலம் மக்றே அவர்களும் நேரடியாகப் பங்கேற்று உரையாற்றவுள்ளார்.
ஈழத்தமிழரையும் தமிழ்நாட்டுத் தமிழரையும் அவர்கள் புலம்பெயர்ந்த தேசமொன்றில் இணைக்கும் பாலமாய் அமையும் பெற்னா தமிழ் விழாவில் அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்றவகையில் இயல் இசை நாடக நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சிறப்பு நிகழ்வுகளாக நடனக் கலைஞர் பிரேம் கோபாலின் நடனம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் சிறப்புரை என்பனவும் இடம்பெறுகின்றன.

ஓட்டமாவடி- பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் மைதானத்தில் திடீரென முளைத்த புத்தர் சிலை
[ திங்கட்கிழமை, 01 யூலை 2013, 11:48.11 AM GMT ]
வாழைச்சேனை ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகப் பிரிவில் உள்ள பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் திடீர் என புத்தர் சிலை இருந்ததால் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளது.
 நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவிலிருந்தே இந்த பத்தர் சிலை இங்கு வைக்கப்பட்டுள்ளதாக அபிவிருத்திச் சங்கத்தினர் அந்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
பிறைந்துரைச்சேனையில் உள்ள அஸ்ஹர் வித்தியாலயம் மற்றும் சாதுலியா வித்தியாலயம் என்பவற்றுக்கு உள்ள ஒரே விளையாட்டு மைதானம் இம்மைதானமாகும். இம்மைதானம் வாழைச்சேனை புத்த ஜயந்தி விகாரைக்கு அருகில் அமைந்துள்ளது.
கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக பாடசாலைகளின் விளையாட்டு நிகழ்ச்சிகள், பிரதேச விளையாட்டுக் கழகங்களின் விளையாட்டுப் போட்டிகள் கலை கலாச்சார நிகழ்ச்சிகள் இங்கு நடைபெற்று வந்தன.
விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள புத்த ஜயந்தி விகாரையின் விகாராதிபதியால் 2010ம் ஆண்டு மார்ச் மாதம் 01ம் திகதி சுற்றுமதில் உடைக்கப்பட்டு இக்காணி புத்த ஜயந்தி விகாரைக்குரிய காணி என்றும் இதற்குள் வெளியாட்கள் எவரும் விளையாட வரக்கூடாது என்று அறிவித்தார்.
இது தொடர்பில் பாடசாலை நிருவாகத்தால் வாழைச்சேனை பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டு வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் வழங்குத் தொடரப்பட்டு 11 தவணைகள் இடம்பெற்றதன் பின்னர் நீதிமன்றத்தால் விகாரைக்குரிய இடம் அல்ல என்று பாடசாலை மைதானம் என்று சுட்டிக்காட்டி 2013ம் ஆண்டு ஜீன் 25ம் திகதி தீர்ப்பளிக்கப்பட்டது.
இன்று அதிகாலை மீண்டும் புத்த ஜயந்தி விகாரையின் விகாராதிபதியினால் மைதானத்தின் நடுவில் மேசையின் மீது புத்தர் சிலை ஒன்றை வைத்துள்ளதனால் குழப்பம் அடைந்த பாடசாலை நிருவாகம் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten