தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 1 juli 2013

யாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் நிஷாந்தன் கைது

நாவலடியில் இனந்தெரியாதோரால் பள்ளிவாசல் உடைப்பு
[ திங்கட்கிழமை, 01 யூலை 2013, 10:02.18 AM GMT ]
மட்டக்களப்பு- கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள மீள்குடியேற்றக் கிராமமான நாவலடி கிராமத்தில் மஸ்ஜிதுல் அந்நூர் பள்ளிவாசல் நேற்று இரவு இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு 9 மணியளவில் இரவு நேரத் தொழுகை முடிந்தவுடன் பள்ளிவாசல் மூடப்பட்டுவிட்டது.
இன்று அதிகாலை தொழுகைக்காக காலை 4 மணியளவில் பள்ளிவாசலில் கடமை செய்பவர், அங்கு சென்றபோது பள்ளிவாசல் உடைந்து காணப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, பள்ளிவாசலில் உள்ளே இருக்கும் ஊண்டியலும் வெளியில் இருக்கும் உண்டியலும் உடைக்கப்பட்டு பணம் எடுக்கப்பட்டுள்ளதுடன், அலுமாரி உடைக்கப்பட்டு, அதிலிருந்த பொருட்களை வெளியே வீசியுள்ளனர் என்று இப்பள்ளிவாசலில் கடமை புரியும் மௌலவி எச்.எம்.இர்பான் தெரிவித்தார்.
இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் நிஷாந்தன் கைது
[ திங்கட்கிழமை, 01 யூலை 2013, 11:34.22 AM GMT ]
யாழ்.பிரதான வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின்பேரில் யாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சி. நிஷாந்தன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ். தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா இதனைத் தெரிவித்தார்.
விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி, குறித்த விடுதியில் அத்துமீறி நுழைந்த யாழ். பிரதேச செயலாளர் மற்றும் நிஷாந்தன் ஆகியோர், அவ்விடுதியில் இருந்த ஜோடியொன்றை பிடித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக குறித்த விடுதி உரிமையாளர் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைச் செய்துள்ளார்.
அம்முறைப்பாட்டின் அடிப்படையில், முன்னாள் மாநகரசபை உறுப்பினர் சி. நிஷாந்தனைக் கைது செய்துள்ளதாகவும் இவரை யாழ். நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் யாழ். தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா மேலும் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten