தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 1 juli 2013

2014ல் ஜனாதிபதி தேர்தலை நடத்தி 13ஐ முழுமையாக ஒழிக்கும் ஆணையைப்பெற அரசாங்கம் திட்டம்: மனோ கணேசன்

சுதந்திரக் கட்சியுடன் இணைந்தார் கூட்டமைப்பின் யாழ்.மாநகரசபை உறுப்பினர்
[ திங்கட்கிழமை, 01 யூலை 2013, 01:33.51 PM GMT ]
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாநகரசபை உறுப்பினர் மு.றெமீடியஸ் மாநகரசபை உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்து, அரசாங்கத்தின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற யாழ்.மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்டு நகரசபை எல்லைக்குள் அதிகபடியான வாக்குகள் பெற்று தெரிவு செய்யப்பட்ட றெமீடியஸ், பின்னர் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் முரண்பாடுகளை எற்படுத்திக் கொண்டு கட்சியுடன் தொடர் முரண்பாட்டு நிலையிலிருந்தார்.
இந்நிலையில் தனது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த றெமீடியஸ், தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் பகிரங்கமான அறிவித்தலையும் விடுத்திருக்கின்றார்.
மேலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இதுவரை தமிழர்களுக்கு எதுவித நன்மையும் செய்யாத நியைலில் அரசுடன் இணைந்து புனர்வாழ்வு, அபிவிருத்தி போன்ற இலக்குகளை அடைய தொடர்ந்தும் உழைப்பேன் எனவும் சத்தமிட்டுள்ளார்.

2014ல் ஜனாதிபதி தேர்தலை நடத்தி 13ஐ முழுமையாக ஒழிக்கும் ஆணையைப்பெற அரசாங்கம் திட்டம்: மனோ கணேசன்
[ திங்கட்கிழமை, 01 யூலை 2013, 12:17.32 PM GMT ]
 2014ம்  வருடம் ஜனாதிபதி  நடத்தி 13ம் திருத்தத்தை முற்றாக ஒழிக்க மக்கள் ஆணையை பெற அரசாங்கம்  திட்டமிட்டுள்ளது. ஆகஸ்ட்  மாதம் மனித உரிமை  ஆணையாளர் நவநீதன்பிள்ளையை  நாட்டுக்குள் வர  அனுமதித்து, 
செப்டம்பர் மாதம் வட மாகாணசபை தேர்தலை நடத்தி, நவம்பர் மாதம் பொதுநலவாய தலைவர்களது மாநாட்டையும் நடத்திவிட்டு, அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தலை நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இதற்காகவே ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்காக இ 19ம் திருத்தத்தை அரசியலமைப்புக்கு கொண்டுவர இன்று அரசு கங்கணம் கட்டி செயல்படுகிறது. இதன்மூலம் நாட்டில் இனவாதத்தை கிளப்பி, அதிகார பகிர்வு என்ற கொள்கையையே இலங்கை அரசியலிலிருந்து அகற்றும் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம் இன்று கொழும்பில் நடத்திய ஊடக மாநாட்டில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
13ம் திருத்தத்தை அமுல் செய்வதாக, ஐநா சபைக்கும், இந்திய தலைவர்களுக்கும் வழங்கிய வாக்குறுதிகளை, புதிய மக்கள் ஆணையை பெறுவதன் மூலம் செல்லுபடியற்றதாக்க அரசு திட்டம் தீட்டியுள்ளது.
அடுத்த வருடம் மார்ச் மாதம் மாதம் நடைபெற நடைபெறவுள்ள ஐநா மனித உரிமை பேரவை மாநாட்டுக்கு முன்னதாகவா அல்லது அதற்கு பிறகா ஜனாதிபதி தேர்தலை நடத்துவது என்று இன்னமும் முடிவாகவில்லை.
நாட்டில் இன்று பொலிஸ், காணி அதிகாரங்கள் பற்றிய வாத பிரதிவாதங்களை நடத்துவித்து கொண்டு மக்களின் கவனத்தை அரசாங்கம் திசை திருப்பியுள்ளது.
இந்த சந்தடியில் விரைவில் கொண்டுவரப்பட உள்ள 19ம் திருத்தத்தின் மூலம், முதல் நான்கு வருடங்களுக்கு வருடங்களுக்கு பிறகு நடத்தப்படலாம் என்று இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலை, முதல் மூன்று வருடங்களுக்கு பிறகு நடத்தலாம் என அரசு தீர்மானித்துள்ளது.
எனவே அடுத்த ஜனாதிபதி தேர்தலில், அதிகாரப் பகிர்வை எதிர்க்கும் அனைத்து இனவாத அமைப்புகளையும் அரவணைத்துகொண்டு அரசாங்கம் களமிறங்க போகின்றது.
இந்நிலையில் அதிகாரபகிர்வு கொள்கையை ஏற்றுக்கொண்டு அரசாங்கத்துக்கு உள்ளே இன்று இருக்கும் தமிழ், முஸ்லிம், இடதுசாரி கட்சிகளும் தீர்மானக்கரமான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten