தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 16 juli 2013

பிரித்தானியாவில் இரு இலங்கையர் கைது- யாழில் இந்தியப் பிரஜையொருவர் கைது

இறைச்சி ஏற்ற வந்த லொறி காவியுடை அணிந்தவர்களால் தீக்கிரை!
[ செவ்வாய்க்கிழமை, 16 யூலை 2013, 07:42.23 AM GMT ]
காவி உடை அணிந்த நான்கு பேர் கொண்ட குழுவொன்றினால் லொறியொன்று தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளதாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தெமட்டகொடை, பேஸ்லைன் வீதியில் உள்ள இறைச்சி மடுவத்துக்கு அருகிலேயே இச்சம்பவம் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த இறைச்சி மடுவத்திலிருந்து இறைச்சி கொண்டு செல்வதற்காக வருகை தந்துள்ள லொறியே இவ்வாறு தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவமானது இன்று அதிகாலை 1.50 மணியளவில் இடம்பெற்றுள்ளமைக் குறிப்பிடத்தக்கது. 

பிரித்தானியாவில் இரு இலங்கையர் கைது- யாழில் இந்தியப் பிரஜையொருவர் கைது
[ செவ்வாய்க்கிழமை, 16 யூலை 2013, 09:37.39 AM GMT ]
பிரித்தானியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இரு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய தூதரகம் தெரிவித்துள்ளது.
21 மற்றும் 22 வயதுடைய இளைஞர்கள் இருவர் வீசா முடிவடைந்த நிலையில், உணவகம் ஒன்றில் சட்டவிரோதமாக வேலை செய்து வந்துள்ளனர்.இதன்போதே குடிவரவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 11ம் திகதி பிரித்தானிய குடிவரவு அதிகாரிகள் உணவகங்களில் மேற்கொண்ட திடீர் சோதனையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ் இலங்கை இளைஞர்களை வேலைக்கமர்த்தியிருந்த உணவகத்தின் உரிமையாளருக்கு குடிவரவு அதிகாரிகளினால் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.
மேலும், நேபாளத்தைச் சேர்ந்த மூன்று நபர்களும் சட்டவிரோதமாக தங்கியிருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் பிரித்தானியாவில் வீசா இன்றி சட்டவிரோதமாக வேலைசெய்வோரை அடையாளம்கண்டுகொண்டால் அவர்களிடம் இருந்து 20000 பிரித்தானிய ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் அபராதம் விதிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளமை என்பதும் குறிப்பிடத்தக்கது.
யாழில் இந்தியப் பிரஜையொருவர் கைது
யாழ்ப்பாணம்- கோப்பாய் பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று புடைவை வியாபாரத்தில் ஈடுபட்ட 43 வயதான இந்தியப் பிரஜையே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடமிருந்து கடவுச் சீட்டு மற்றும் அவர் பயன்படுத்திய சைக்கிளொன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கோப்பாய் பொலிஸார் குறிப்பிட்டனர்.

Geen opmerkingen:

Een reactie posten