[ செவ்வாய்க்கிழமை, 16 யூலை 2013, 04:34.47 PM GMT ]
பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் 175 ஆவது ஆண்டு நிறைவு இறுதிநாள் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவ் வைபவத்தில் அவர் தொடர்ந்து உரையாற்றும்போது,
இலங்கையின் கல்விப் பாரம்பரியத்தில் யாழ்ப்பாணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்து விளங்குகின்றது. ஹாட்லிக் கல்லூரி போன்ற கல்லூரிகள் இம்மாவட்டத்தின் கல்விச் சிறப்புக்குக் காரணமாக விளங்கி வருகின்றது. கற்றவர்களின் உறைவிடமாக விளங்குகின்ற வடமராட்சிப் பிரதேசத்தின் கல்வி மேன்மைக்கு ஹாட்லிக் கல்லூரி அடித்தளமாக விளங்குகின்றது.
இக்கல்லூரியின் பழைய மாணவர்கள் கல்லூரியின் வளர்ச்சியில் அக்கறை உள்ளவர்களாக உள்ளார்கள். வெளிநாடுகளிலுள்ள பழைய மாணவர் சங்க கிளைகளும் இக்கல்லூரியின் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் பெரிதும் உதவியுள்ளன.
தகவல் தொழில் நுட்பம், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்கள் இன்று கல்வியில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. தற்போது க.பொ.த. உயர்தரத்தில் தொழில் நுட்பப்பிரிவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வடமாகாணத்தில் 15 பாடசாலைகளில் இப்பிரிவு ஆரம்பிக்கப்படுகின்றது. கலைப்பிரிவில் பட்டம் பெற்று கல்வியைப் பூர்த்தி செய்தவர்கள் பலர் தொழில் வாய்ப்பின்றி இருக்கும் நிலை இன்று காணப்படுகின்றது.
அவ்வாறு அவர்களுக்கு தொழில் கிடைத்தாலும் அவர்கள் கற்ற பாடங்களுக்கும் தொழிலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லாத நிலையே காணப்படுகின்றது.
எதிர்காலத்தில் இக்குறைபாட்டினை நிவிர்த்தி செய்யும் முகமாகவே தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் தொழில்நுட்பப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கணித, விஞ்ஞானத்துறைக்குச் செல்ல முடியாத மாணவர்கள் தொழில் நுட்பப் பிரிவைத் தெரிவு செய்யமுடியும்.
வடமாகாணத்தில் 700 ஆங்கில ஆசிரியர்களுக்குப் பற்றாக்குறை நிலவுகின்றது. அச்சேவைக்கு விண்ணப்பம் கோரியபோது 100க்கும் குறைந்தவர்களே விண்ணப்பித்துள்ளார்கள். கணிதம், விஞ்ஞானம், தகவல் தொழில் நுட்பம் ஆகிய பாடங்களுக்கும் போதிய ஆசிரியர்கள் இல்லாத நிலையே காணப்படுகின்றது. முன்பு எமது மாவட்டம் கணிதம், விஞ்ஞானம் ஆகிய துறைகளில் கொடி கட்டிப் பறந்தது.
இக்கல்லூரி பேராசிரியர்கள், பொறியியலாளர்கள், வைத்திய நிபுணர்கள் என புகழ்பூத்த பேரறிஞர்களை உருவாக்கியுள்ளது. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, நேரந்தவறாமை, பணிவு, தன்னடக்கம், எளிமை என்பவை இக்கல்லூரியின் மாணவர்களிடம் நான் கண்ட பெருமைமிக்க விடயங்களாகும். என்றார்.
காரைநகர் கசூரினா கடற்கரைக்குச் செல்லுகின்ற சில இளைஞர்கள் மதுபோதையில் பெண்களிடம் சேட்டை
[ செவ்வாய்க்கிழமை, 16 யூலை 2013, 04:41.13 PM GMT ]
கசூரினா கடற்கரையின் சுற்றுலா மைய வளாகத்தில் மதுபானம் பாவிப்பதற்கு காரைநகர் பிரதேச சபை தடை விதித்துள்ள நிலையில் சுற்றுலா மையத்திற்கு வெளியில் மது அருந்துவதைக் காணமுடிகிறது.
மது அருந்திய இளைஞர்கள் போதை தலைக்கேறியதும் தம்மை மறந்து மற்றவர்களுடன் விதண்டாவாதத்தில் ஈடுபடுதல், இளம் பெண்களிடம் ஆபாச வார்த்தைகள் பேசி சில்மிஸங்களில் ஈடுபட முனைதல் போன்ற சம்பவங்கள் அடிக்கடி இடம்பெற்று வருவதாக இங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
கசூரினா சுற்றுலா மையத்தில் பொலிஸார் கடமையில் உள்ள போதிலும் இச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த முடியாதுள்ளதாக பிரதேசவாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
காரைநகர் பிரதேச சபையினர் பாதுகாப்பு ஊழியர்களை நியமித்து இவ்வாறான சம்பவங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொது மக்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
Geen opmerkingen:
Een reactie posten