தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 1 juli 2013

விடுதலைப் புலிகள் அமைப்பின் தடை நீட்டிப்பு சரியே: வைகோவின் மனு தள்ளுபடி

மதமாற்ற நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தவேண்டும்!- ஞானசார தேரர்
[ திங்கட்கிழமை, 01 யூலை 2013, 07:39.40 AM GMT ]
சிங்கள் பௌத்த மக்களை ஏமாற்றி நாடு முழுவதும் மிகவும் சூட்சுமமான முறையில் செயற்படுத்தப்பட்டு வரும் மதமாற்ற நடவடிக்கைகளை பொலிஸ் மா அதிபரின் தலையீட்டின் அடிப்படையில் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
புத்தசாசனம் என்ன என்பதை விளக்கி கூற கூட முடியாத, நாட்டின் புத்தசாசன அமைச்சினால், நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும், இந்த மத மாற்றங்கள் தொடர்பாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹங்வெல்ல, கந்தானை, பேருவளை உள்ளிட்ட நாட்டின் பல பிரதேசங்களில் இவ்வாறான மாற்று மதங்களின் ஜெப நிலையங்கள் செயற்பாடுகள் காரணமாக பல பௌத்த மக்கள் இடையூறுகளுக்கு முகம் கொடுப்பதுடன், ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.
இந்த மாற்று மதத்தினர், மக்களின் வறிய நிலைமை பயன்படுத்தி, அவர்களுக்கு தேவையானவற்றை வழங்கி, மத மாற்றம் செய்து வருகின்றனர். இது தார்மீகத்திற்கு எதிரான தவறு.
அடிப்படை வாத சமய அமைப்புகள் வெளிநாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அவை இலங்கையில் மாத்திரம் செயற்பட அனுமதித்திருப்பது மிகவும் கவலைக்குரியது எனவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தடை நீட்டிப்பு சரியே: வைகோவின் மனு தள்ளுபடி
[ திங்கட்கிழமை, 01 யூலை 2013, 07:45.45 AM GMT ]
விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இந்தியாவில் விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பை எதிரித்து மதிமுக பொதுச் செயாளர் வைகோ மற்றும் வழக்கறிஞர் புகழேந்தி ஆகியோர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
 கடந்த 1991ம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்யப்பட்ட இயக்கமாக மத்திய அரசு அறிவித்தது. அதன் பிறகு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை அந்த தடை நீட்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
கடந்த 2010ம் ஆண்டு மே மாதம் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை மத்திய உள்துறை அமைச்சகம் நீட்டித்தது.
இந்த தடை நீட்டிப்பு சரி தானா என்பது குறித்து ஆய்வு நடத்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது.
அந்த தீர்ப்பாயம் டெல்லி, சென்னை, ஊட்டி உள்பட பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தி தடை நீட்டிப்பு சரி தான் என்று 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் வழக்கறிஞர் புகழேந்தி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை 1 ஆண்டுக்கு முன்பே முடிந்தாலும் தீர்ப்பு மட்டும் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி எலிபி தர்மாராவ் மற்றும் எம். வேணுகோபால் ஆகியோர் இன்று வழங்கினர்.
அவர்கள் தங்கள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது, விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீட்டித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சரி தான் என்ற தீர்ப்பாயத்தின் தீர்ப்பில் தவறு ஒன்றும் இல்லை.
அதனால் வைகோ மற்றும் வழக்கறிஞர் புகழேந்தி ஆகியோர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைப்புலிகளுக்கு எதிரான சட்டம் நீதிக்கு எதிரான சட்டம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடை நீட்டிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் வைகோ கூறியுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten