[ திங்கட்கிழமை, 01 யூலை 2013, 04:13.42 AM GMT ]
கடந்த மாதம் 5ம் திகதி 70 வயதான ராஜபக்ச முதியான்சேலாகே பிரேமதாச என்ற பூசகரின் சடலம் கோயிலுக்கு பின்புறமாக உள்ள காட்டில் உரப் பையொன்றில் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
சர்வதேச கால்பந்தாட்ட நட்சத்திரம் டியாகோ மரடோனா, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தீவிர ரசிகர் என்ற பரபரப்பான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவந்த பொலிஸார் சந்தேகநபர் ஒருவரை பதுளையில் கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் இன்று திஸ்ஸமஹாராமை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
சந்தேகநபர் அளித்துள்ள வாக்குமூலத்திற்கு அமைய மேலும் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை கதிர்காமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பிரபாகரனின் தீவிர ரசிகர் மரடோனா: பரபரப்புத் தகவல்
[ திங்கட்கிழமை, 01 யூலை 2013, 08:11.21 AM GMT ]
மரடோனா என்ற பெயரைக் கேட்டாலே உலகெங்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள்.
உலகின் எந்த நாட்டுக்கு, எந்தவொரு குக்கிராமத்திற்குச் சென்றாலும் அவரைப் பார்ப்பதற்காக ஒரு பெருங்கூட்டம் அலைமோதும்.
அப்படிப்பட்ட மரடோனா அண்மையில் இந்தியாவிற்கு சென்றிருந்தார். அன்றைய தினம் இரவு நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருந்த போது வெளியில் பலமான குரல்களைக் கேட்டு ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தவர், தனது இரசிகர்கள் தான் தன்னைப் பார்ப்பதற்காக அங்கே குழுமி நின்று குரல் எழுப்பிக் கொண்டிருப்பதைக் கண்டார்.
அவர்களுக்கு தனது மகிழ்ச்சியைத் தெரிவிப்பதற்காக அந்த இரவு வேளையிலும் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார். வாசலில் காவலுக்கு நின்று கொண்டிருந்த ஒரு காவலருக்கு கைகொடுத்தவர், உன்னுடைய பெயர் என்ன என்று கேட்டார். அவர் கேட்டது அந்தக் காவல்துறை திகாரிக்குப் புரியவில்லை.
அவரது சீருடையில் குத்தியிருந்த பெயரை வாசித்த மரடோனா சட்டென்று உற்சாகமாகி அவரைக் கட்டியணைத்துள்ளார். பின்னர் தனது தோள் பட்டையில் பச்சை குத்தியிருக்கும் புரட்சி வீரன் சேகுவேராவின் படத்தை அந்தக் காவல்துறையினருக்குக் தூக்கிக் காட்டியுள்ளார். அந்த காவல்துறையினரின் சீருடையில் பொறிக்கப்பட்டிருந்த பெயர் பிரபாகரன்!
அந்தப் பெயருக்காகவே அவரைக் கட்டியணைத்துள்ளார் மரடோனா.
சர்வதேச அரங்கில் விடுதலைப் புலிகளின் தலைவர் எந்தளவு பிரபலமாக இருக்கின்றது என்பதற்கு இந்தச் சம்பவம் இன்னொரு எடுத்துக்காட்டு என்பதாக அங்கு கூடி நின்றவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இழந்ததை மறந்து இப்படியும் ஒரு கூட்டம்!!
Geen opmerkingen:
Een reactie posten