[ திங்கட்கிழமை, 01 யூலை 2013, 08:53.01 AM GMT ]
இது குறித்து யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார்.
மட்டக்களப்பு, கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாகனேரி நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் விவசாயச் செய்கையில் ஈடுபட்டுள்ள தமிழ் விவசாயிகள் மீது கடந்த வெள்ளிக்கிழமை வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும், அப்பகுதியில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத விவசாயச் செய்கையை தடை செய்யக் கோரியும் இன்று ஆர்ப்பாட்ட பேரணியொன்று நடைபெற்றது.
குறித்த சந்திப்பில் மேலும் அவர் உரையாற்றுகையில்,
மாகாணசபை தேர்தல் தொடர்பில் அண்மையில் நடைபெற்ற கட்சியின் கலந்துரையாடலின்போது பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவை முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு நிறுத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாகாணசபை தேர்தல் வேட்பாளர்கள் அந்தந்த மாவட்டம் சார்ந்தவர்களால் தெரிவு செய்யப்படுவதுடன், அந்தப் பிரதேசம் சார்ந்தவர்களாகவும், நீண்டகாலம் தமிழ் தேசியத்திற்காக உழைத்தவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதையும் குறித்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இதேபோல் போட்டியிடும் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் பொறுப்பும் அந்தந்த மாவட்டங்களிடம் விடப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த தீர்மானங்கள் அதற்கான நியாயங்கள் உள்ளடங்கிய மகஜர் கட்சியின் தலமைப் பீடத்திற்கு அனுப்பப்பட்டிருக்கின்றது.
இதனோடு மாவை சேனாதிராசா மாகாணசபையின் முதன்மை வேட்பாளராக தெரிவு செய்யப்படுவதில் ஏனைய கூட்டமைப்பிலுள்ள ஏனைய கட்சிகள் தங்கள் ஆதரவினைத் தெரிவித்திருக்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் விவசாயிகள் மீதான தாக்குதலைக் கண்டித்து கிரானில் ஆர்ப்பாட்டப் பேரணி
[ திங்கட்கிழமை, 01 யூலை 2013, 09:08.15 AM GMT ]
இப்பேரணியானது கிரான் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி கிரான் தபால் அலுவலகம் வரை சென்று பின்னர் ஆலயத்தை வந்தடைந்தது. பேரணி போக்குவரத்துக்கு எந்தவித இடையூம் இன்றி இடம்பெற்றது.
இப்பேரணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரெட்ணம், கி.துரைராஜசிங்கம், வாழைச்சேனை ஸ்ரீ புத்த ஜயந்தி விகாரையின் விகாராதிபதி பூஜ நாவாநே அபேவன்ச தேரோ மற்றும் விவசாயிகள் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.
“நீர்பாசனத் திணைக்களமே விவசாயிகளை மோதவிட்டுப் பார்க்காதே”, “நீர்பாசனத் திணைக்களமே விவசாயிகளை மோத விடாதே!”, “விவசாயிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்”, “வாகனேரிக் குளத்துக்கு வரும் நீரை சட்டவிரோத கட்டுக்களை போட்டு தடை செய்யாதே”, “சட்டவிரோத விவசாயத்தை தடை செய்”, “சட்டவிரோத கட்டுக்களை அகற்று” போன்ற சுலோகங்கள் அடங்கிய பதாதைகள் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷமிட்டனர்.
இங்கு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் ஆகியோர் உரையாற்றினர்.
இவ்விடத்தில் வைத்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன் பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரெட்ணம், கி.துரைராஜசிங்கம் ஆகியோரிடம் விவசாயகளினால் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
இதன்பின் கலந்து கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும், விவசாய அமைப்பு பிரதிநிதிகளும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு சென்று அரசாங்க அதிபரை சந்தித்ததுடன், விவசாய அமைப்பு பிரதிநிதிகள் அரசாங்க அதிபருக்கும், கிரான் பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளருக்கும் மகஜர் கையளிக்கப்பட்டது.
Geen opmerkingen:
Een reactie posten