தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 16 juli 2013

எந்தக் கொம்பனுக்கும் அடியணிய மாட்டோம்! காணி, பொலிஸ் அதிகாரங்களை ஜனாதிபதி நீக்குவார்! வீரவன்ச சூளுரை

வெளிநாட்டு நாணயங்களை சுவிஸ் நாட்டுக்கு கடத்த முயற்சித்தவர் கைது
[ செவ்வாய்க்கிழமை, 16 யூலை 2013, 05:46.45 AM GMT ]
பெருமளவான வெளிநாட்டு நாணயத்தாள்களை கடத்திச் செல்ல முயன்ற நபரொருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நாணயத்தாள்களை சுவிஸ் நாட்டுக்கு கட்டத்த முற்பட்டவேளை நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதான குறித்த நபரிடமிருந்து 115,000 யூரோக்களும், 21,000சுவிஸ் பிராங்குகளும் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த வெளிநாட்டு நாணயத்தாள்களின் மொத்தப் பெறுமதி சுமார் 2 கோடியே, 29 இலட்சம் ரூபா எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சுங்கப் பிரிவினர் இவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எந்தக் கொம்பனுக்கும் அடியணிய மாட்டோம்! காணி, பொலிஸ் அதிகாரங்களை ஜனாதிபதி நீக்குவார்! வீரவன்ச சூளுரை
[ செவ்வாய்க்கிழமை, 16 யூலை 2013, 05:19.53 AM GMT ]
இந்தியா உள்ளிட்ட எந்தக் கொம்பன்களின் அழுத்தங்களுக்கும் அடிபணியாமல் மாகாண சபைகளுக்கான காணி, பொலிஸ் அதிகாரங்களை நீக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என்று அமைச்சர் விமல் வீரவன்ச சூளுரைத்துள்ளார்.
வட மாகாண சபைத் தேர்தலுக்கு முன் மாகாண சபைகளுக்கான காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மீளப் பெறுவதற்கான நடவடிக்கைகள் நிச்சயம் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமக்கு தனிப்பட்ட ரீதியில் உத்தரவாதமொன்றை அளித்திருப்பதாகவும், ஜனாதிபதி தனது முன்னைய உத்தரவாதங்களை நிறைவேற்றியது போன்று இதனையும் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அமைச்சர் விமல் வீரவன்ச  மேலும் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் விமல் வீரவன்சவின் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் செய்தி இணையத்தளத்துக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் மேற்கண்ட கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்துள்ள அவர்,
விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது ஏற்பட்ட சர்வதேச நெருக்கடிகளை கவனத்தில் எடுக்காமல் யுத்தத்தைத் தொடர ஜனாதிபதி உறுதுணையாக இருந்தார்.
அதேபோன்று தற்போது 13வது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக சர்வதேச நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியையும் ஜனாதிபதி பொருட்படுத்த மாட்டார். இந்தியா மேனனை அல்ல, இன்னும் யாரை அனுப்பி நெருக்கடி கொடுத்தாலும் எங்களது இலக்கில் மாற்றம் ஏற்படாது.
மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரம் என்பது பாம்பின் நச்சுப் பல்லைபோன்றது. அதைப் பிடுங்கியாக வேண்டும். இதில் எந்த சமரசத்துக்கும் இடம்கிடையாது.  இந்தியா உள்ளிட்ட எந்தக் கொம்பன்களுக்கும் தலைசாய்க்கப் போவது கிடையாது என்றும் அமைச்சர் விமல் வீரவன்ச உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten