தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 1 juli 2013

முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாலாக செயற்படுகின்றது!– தேசிய சுதந்திர முன்னணி!

முக்கிய பிரபுக்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுகின்றதா என்பது குறித்து உயர்மட்ட விசாரணை
[ திங்கட்கிழமை, 01 யூலை 2013, 02:19.12 AM GMT ]
நாட்டின் முக்கிய பிரபுக்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுகின்றதா என்பது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்பட உள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். 
எனது தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டதனைப் போன்றே, முக்கிய பிரபுக்களின் தொலைபேசி உரையாடல்களும் ஒட்டுக் கேட்கப்படுகின்றன.
இதனால் எதிர்வரும் காலங்களில் தேசியப் பாதுகாப்பை கருத்திற் கொண்டு புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
எனது செல்லிடப்பேசியின் உரையாடல்களை வெளிநாட்டு நிறுவனமொன்று இரகசியமாக ஒட்டுக் கேட்டு வருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றன.
இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு தூதரகங்களின் ஒத்துழைப்புடன் அதி நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இவ்வாறு பிரபுக்களின் செல்லிடப் பேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது,
முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாலாக செயற்படுகின்றது!– தேசிய சுதந்திர முன்னணி
[ திங்கட்கிழமை, 01 யூலை 2013, 02:21.18 AM GMT ]
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாலாக செயற்பட்டு வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமரர் அஷ்ரப்பின் கொள்கைக்கு புறம்பாக செயற்படுகின்றது.
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற ஆர்வம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜே.வி.பி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடையாது.
குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசிய இனப்பிரச்சினையை பயன்படுத்தியே அரசியலில் ஈடுபடுகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்கே கூடுதல் நேரத்தை செலவிட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten