தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 1 juli 2013

குருணாகல் கதிரேசன் கோயில் ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை நடத்திய 20 பொலிஸார் இடமாற்றம்

இலங்கைக்கும் சீஷெல்ஸ் நாட்டுக்கும் இடையில் மூன்று புரிந்துணர்வு உடன்படிக்கை
[ திங்கட்கிழமை, 01 யூலை 2013, 02:31.34 AM GMT ]
இலங்கைக்கும் சீஷெல்ஸ் நாட்டுக்கும் இடையில் மூன்று புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, சீஷெல்ஸ் நாட்டுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
விமான சேவை, தொழிற் பயிற்சி மற்றும் இளைஞர் அபிவிருத்தி, பாதுகாப்பு ஆகிய விடயங்கள் தொடர்பில் உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
30 ஆண்டுகால யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது என ஜனாதிபதி மஹிந்த தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நீண்ட கால சமாதான நிலைமை ஏற்பட்டுள்ளது.
வடக்கு அபிவிருத்திக்காக 500 கோடி அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

குருணாகல் கதிரேசன் கோயில் ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை நடத்திய 20 பொலிஸார் இடமாற்றம்
[ திங்கட்கிழமை, 01 யூலை 2013, 02:25.30 AM GMT ]
குருணாகல் - கதிர்காம வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ கதிரேசன் கோயில் ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை நடத்திய 20 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த விசாரணைகளை நடாத்திய பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் 20 பேர் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
புத்தளம் வனாத்தவில்லு போன்ற பொலிஸ் நிலையங்களுக்கு இவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நூறு கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை மோசடி செய்து அந்தப் பணத்தை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஆலய அறங்காவலர் சபையின் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோர் இந்த மோசடி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆலய அறங்காவலர் சபையைச் சேர்ந்த உறுப்பினர்கள் இந்து சமய அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சிடம் செய்த முறைப்பாட்டை அடுத்து இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்த விசாரணை நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பத்து லட்ச ரூபா லஞ்சம் பெற்றுக் கொண்டு விசாரணைகளை மூடி மறைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குற்றம் சுமத்தப்பட்ட உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten