[ திங்கட்கிழமை, 01 யூலை 2013, 01:00.21 AM GMT ]
இலங்கை அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை மீறி செயல்பட்டு வருவதாலேயே நாடாளுமன்றத் தேர்வுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்குபெறாது என்று அதன் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.
இலங்கை அரசியல் சாசனத்தில் சில திருத்தங்களை கொண்டுவரும் நோக்கில் அரசு நாடாளுமன்றத் தேர்வுக் குழு ஒன்றை அமைத்துள்ளது
அதில் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜே வி பி ஆகியவை இந்தக் குழுவில் பங்குபெறுவது இல்லை என்று தீர்மானித்துள்ள நிலையில், இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதில் சேருவதில்லை என்று முடிவெடுத்துள்ளது.
அரசுக்கும் தமக்கும் முன்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது, இருதரப்புக்கும் இடையே ஒரு உடன்பாடு எட்டப்பட்டு அதன் பின்னர் அந்த அம்சங்களை தேர்வுக் குழுவுக்கு எடுத்துச் செல்வது என்று தீர்மானிக்கப்பட்டதாகவும், ஆனால் அரசு அதை மீறிச் செயல்படுவது தங்களுக்கு ஏற்புடையதல்ல என சுமந்திரன் கூறுகிறார்.
மாகாண சபைகளுக்கு பின்னடைவு?
வட மாகாண சபைக்கான தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், 13 வது சட்டத் திருத்தத்தையும் மாகாண சபை முறையையும் முற்றாக அழிக்க அல்லது வலுவை குறைக்க அரசு தற்போது நடவடிக்கைகளை எடுத்து வருகிறது எனவும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.
மாகாண சபைகளின் அதிகாரங்களை குறைக்க நாடாளுமன்றத் தேர்வுக் குழுவின் மூலம் அரசு ஒரு முன்னெடுப்பைச் செய்யும் நிலையில், அப்படியான ஒரு செயல்பாட்டில் ஈடுபட முடியாது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருதுகிறது எனவும் அவர் கூறுகிறார்.
இந்திய அரசு, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச சமூகத்துக்கு 13 ஆவது சட்ட திருத்தத்தில் அளிக்கப்பட்டுள்ள அம்சங்களை முற்றாக நிறைவேற்றி அதற்கு மேலாகவும் அதிகாரப் பரவலைச் செய்வோம் என்று கொடுத்த உறுதிமொழியையும் மீறி, இப்போது அதற்கு எதிரான விதத்தில் இலங்கை அரசு செயல்பட்டு வருவதாகவும் சுமந்திரன் சுட்டிக்காட்டுகிறார்.
எதிர்ப்புக் குரலுக்கு இடமில்லை
அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தேர்வுக் குழுவையையும் அப்படியான நடவடிக்கைக்கு ஒரு களமாக பயன்படுத்த அரசு எண்ணியுள்ள நிலையில், தங்களால் அந்தக் குழுவில் அங்கம் வகிக்க முடியாது எனவும் அவர் வலியுறுத்துகிறார்.
அதிகாரப் பரவலாக்கத்துக்கு ஆதரவான கருத்துக்களை அரசுக்குள்ளேயே கொண்டுள்ள அமைச்சர்கள் திஸ்ஸ விதாரண, ரவூஃப் ஹக்கீம் மற்றும் ராஜித சேனாரட்ன ஆகியோர் இந்தக் குழுவில் உள்வாங்கப்படவில்லை என்பதையும் சுட்டுக்காட்டும் சுமந்திரன், அந்தக் குழுவிலும் பெரும்பான்மையினரின் ஆதிக்கமே கூடுதலாக இருக்கும் எனவும் கூறுகிறார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் பிபிசிக்கு அளித்த பேட்டியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சிறுபான்மைக் கட்சிகளுடன் ஓரணிக்கு சாத்தியமில்லை: இதொகா
இலங்கையில் அரசியலமைப்புத் திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளுக்காக இலங்கை அரசாங்கம் அமைத்துள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு எதிரான சிறுபான்மை அரசியல்கட்சிகளுடன் அணிசேர வாய்ப்பில்லை என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
மாகாணசபைகளின் அதிகாரங்களைக் குறைக்கும் முயற்சிகளுக்கு எதிராக தமிழ், முஸ்லிம் சிறுபான்மைக் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று அரசியல்கட்சிகள் சில கோரிக்கை விடுத்துள்ளமை தொடர்பில் கேட்டபோதே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் முத்து சிவலிங்கம் தமிழோசையிடம் தங்கள் நிலைப்பாட்டைத் தெரிவித்தார்.
ஆளும் சுதந்திரக்கட்சி தலைமையிலான கூட்டணியில் ஏற்கனவே அங்கம் வகிக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம், அரசாங்கம் அமைத்துள்ள 19 பேர் கொண்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிலும் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மற்றக் கட்சிகளும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இணையவேண்டும் என்று அழைப்பு விடுப்பதாக முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கெடுப்பதன் மூலமே ஏனைய சிறுபான்மைக் கட்சிகள் தமது நிலைப்பாட்டை முன்வைக்க வாய்ப்பு ஏற்படும் என்றும் அமைச்சர் சிவலிங்கம் மேலும் கூறினார்.
மலையகத் தமிழர்களின் வாழ்விடங்கள் பறிபோகும் அபாயங்கள் இருப்பதாகவும் அதற்காக தாம் அவதானமாக செயற்பட வேண்டுமெனவும் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.
மலையகத் தமிழர்களின் வாழ்விடங்கள் பறிபோகும் அபாயங்கள் இருப்பதாகவும் அதற்காக தாம் அவதானமாக செயற்பட வேண்டுமெனவும் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.
அரசாங்கத்திலிருந்து வெளியேறி எதிரணியில் அமர்வதன் மூலம் மலையகத் தமிழர்களின் அடிப்படைப் பிரச்சனைகள் தீர்க்கப்படாது என்றும் அவர் மேலும் கூறினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் இடம்பெறப் போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தெரிவுக்குழுவில் பங்கெடுக்கவில்லை.
அரசாங்க கூட்டணியில் உள்ள மற்றும் எதிரணியில் உள்ள சிறுபான்மைக் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று சில கட்சிகள் கோரியுள்ளன.
அரசாங்கத்தில் உள்ள கடும்போக்கு தேசியவாதக் கட்சிகள் மாகாணசபைகளின் அதிகாரங்களைக் குறைக்க வேண்டுமென்று நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
60 வருடங்களுக்கு மேலாக போராடி வருகின்றோம்! கிராம யாத்திரையில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன்
[ திங்கட்கிழமை, 01 யூலை 2013, 12:36.31 AM GMT ]
...அபிலாஷைக்காக கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு வழிகளிலும் ஓர் இனம் என்ற அடிப்படையில் போராடி வருகின்றோம்.
தமிழர்களது தேசிய இருப்புக்கான உயிரினும் மேலான இந்த ஆவலை 13 வது திருத்தமோ, அதன் கீழ் வரும் மாகாண சபை தேர்தலோ, அதில் வெற்றி பெற்று நாங்கள் அமைக்கக்கூடிய மாகாண சபையோ பூர்த்தி செய்யப் போவதில்லை.
ஆனால் இந்த மாகான சபை தேர்தல் நடைபெற்றால் அதில் நாங்கள் ஏன் பங்கு பற்ற வேண்டும்? சர்வதேசத்தின் முன்னால் தமிழர்களின் இன்றைய காலகட்ட தேவை என்ன? என்று முழங்காவில் பிரதேசத்தில் நடைபெற்ற கிராம யாத்திரையின் போது பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்கள் மக்களுடன் கலந்துரையாடினார்.
இச் சந்திப்பானது அப்பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் பிரதேச மக்கள் ஆகியோருடன் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது .
கால்நடை மூலமாகச் சென்ற இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணியின் செயலாளர் கு.சர்வானந்தா, அக்கராயன் பிரதேச அமைப்பாளர் பொ.கிருபாகரன் மற்றும் அப் பிரதேசத்தின் அமைப்பாளர் செ.சிறீரஞ்சன் ஆகியோர் பங்கு பற்றினர்.
தமிழர்களுடைய அபிலாஷைகளுக்காக பாடுபட்டு உழைக்கும் உங்களுடன் தான் என்றும் நாங்கள் இருப்போம் என்று மக்கள் நம்பிக்கையூட்டி அனுப்பி வைத்தனர்.
Geen opmerkingen:
Een reactie posten