[ ஞாயிற்றுக்கிழமை, 30 யூன் 2013, 11:39.32 PM GMT ]
தென் மாகாண சபையில் ஆளுங்கட்சி மாகாண சபை உறுப்பினரான, முன்னாள் இராணுவ மேஜர் அஜித் பிரசன்ன என்பவரே பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவினால் இவ்வாறு அச்சுறுத்தப்பட்டுள்ளார்.
மாகாண சபைகளுக்கான காணி மற்றும் பொலிஸ் அதிகாரத்தை ரத்துச் செய்வதற்கான வரைவு சட்டமூலம் ஒன்றை ஜாதிக ஹெல உறுமய நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. இந்த சட்டமூலத்திற்கு ஜனாதிபதி தலைமையிலான அரசு ஆதரவு தெரிவித்துள்ளது.
மாகாண சபைகளுக்கான காணி மற்றும் பொலிஸ் அதிகாரத்தை ரத்துச் செய்வதற்கான வரைவு சட்டமூலம் ஒன்றை ஜாதிக ஹெல உறுமய நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. இந்த சட்டமூலத்திற்கு ஜனாதிபதி தலைமையிலான அரசு ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்படுவதற்கு முன் அனைத்து மாகாண சபைகளினதும் ஒப்புதலைப் பெற வேண்டும் என்றொரு சட்டவிதி காணப்படுகிறது.
இதற்காக மாகாண சபைகளில் இந்த சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பு நடந்தபோது வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களை மிரட்டி, சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வைக்கும் நடவடிக்கையில் அரசு வெற்றி கண்டிருந்தது.
எனினும் தென் மாகாண சபையில் இதற்கான வாக்கெடுப்பு நடந்தபோது ஆளுங்கட்சியின் மாகாண சபை உறுப்பினரும், முன்னாள் இராணுவ மேஜருமான அஜித் பிரசன்ன துணிச்சலுடன் எதிர்த்து வாக்களித்தார்.
மேலும் மாகாண சபைகளுக்கு அதிகாரப் பரவலாக்கல் மூலமே இலங்கையில் சமாதானம் நிலைபெறச் செய்ய முடியும் என்றும் அவர் பகிரங்கமாக கருத்து வெளியிட்டிருந்தார்.
இது பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கடும் கோபத்துக்குள்ளாகியது.
உடனடியாக குறித்த மாகாண சபை உறுப்பினரை பாதுகாப்பு அமைச்சுக்கு வலுக்கட்டாயமாக வரவழைத்த அவர், கடும் தொனியில் அவரை அச்சுறுத்தியுள்ளார்.
மேலும் மாகாண சபைகளுக்கு அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக தொடர்ந்தும் ஆதரவாக கருத்து வெளியிடும் பட்சத்தில் மாகாண சபை உறுப்பினரின் உயிருக்கும் உத்தரவாதம் இருக்காது என்றும் மிரட்டியுள்ளார்.
இதனையடுத்து மாகாண சபை உறுப்பினர் மேஜர் அஜித் பிரசன்ன, தேசியப் பாதுகாப்புக்கான ஊடக மையத்தில் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தினார்.
அங்கு அழும் குரலில் தனது கருத்தை வெளியிட்ட அவர், கட்சியின் கருத்து தொடர்பில் தான் சரிவர தெளிவூட்டப்படாத காரணத்தினால் சட்டமூலத்தை எதிர்த்து வாக்களித்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் தான் இனிவரும் காலங்களில் மாகாண சபைகளுக்கு அதிகாரப் பரவலாக்கல் விடயத்தில் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தப் போவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
இவ்வாறான விடயங்களின் மூலம் மாகாண சபைகளின் அதிகாரத்தைப் பறிக்கும் சட்டமூலத்தை அச்சுறுத்தல் மூலம் அரசாங்கம் நிறைவேற்றிக் கொள்ள முயற்சிப்பதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதிகார வெறியில் மோதிக் கொள்ளும் அமைச்சர்கள்: சம்பிக்க - பவித்ரா கடும் மோதல்
[ திங்கட்கிழமை, 01 யூலை 2013, 12:19.35 AM GMT ]
இதன் ஒரு கட்டமாக கடந்த வாரம் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அமைச்சர் அதாவுல்லாவை கடுமையாக விமர்சித்திருந்தார்.
மறுபுறத்தில் அமைச்சர் அதாவுல்லா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமை கடுமையான முறையில் விமர்சனம் செய்திருந்தார்.
அந்த வரிசையில் தற்போது அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க மற்றும் பவித்ரா வன்னியாரச்சி ஆகியோருக்கிடையிலான அதிகார மோதல் வெடித்துள்ளது.
இதன் பின்னணியில் அண்மையில் உயர்த்தப்பட்ட மின் கட்டணம் தொடர்பான விவகாரம் மற்றும் அமைச்சரவை இலாகா போன்ற விடயங்கள் உள்ளதாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மின்கட்டண அதிகரிப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்டிருந்த மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் கட்டுப்பாட்டில் மின்சாரத்துறை இருந்தபோது அவர்தான் மின்கட்டண உயர்வு தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டிருந்ததாக தெரிவித்திருந்தார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் சம்பிக்க ரணவக்க, அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி மூளை பிசகிய நிலையில் கண்டபடி உளறுவதாக ஆத்திரத்தை வெளிக்காட்டியுள்ளார்.
மறுபுறத்தில் மின்சக்தி, எரிபொருள் அமைச்சராக சம்பிக்க இருந்தபோது அணுசக்தித்துறை அவரது கட்டுப்பாட்டில் இருந்தது. தற்போது அந்த அமைச்சுப் பொறுப்பில் பவித்ரா வன்னியாரச்சி இருக்கிறார்.
சம்பிக்க ரணவக்கவுக்கு தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
எனினும் தான் அணுசக்தித் துறைக்கும் பொறுப்பாக இருப்பதாக அவர் உரிமை கோரி வருகின்றார். தனது அமைச்சரவை கடிதத் தலைப்புகளையும் அவ்வாறே பயன்படுத்தி வருகிறார்.
இந்த விவகாரம் ஜனாதிபதி வரை போனதன் காரணமாக அணுசக்தித் துறை சம்பிக்க ரணவக்கவுக்கு இல்லை என்பதை உணர்த்தும் விதமாக அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தனது போக்கை மாற்றிக் கொள்வதாக இல்லை.
இதன் காரணமாக அவருக்கும், அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சிக்கும் இடையிலான மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருவதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது.
Geen opmerkingen:
Een reactie posten