தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 22 juli 2013

வடமாகாண சபைத் தேர்தலுக்கு முன் தெரிவுக்குழுவின் சிபார்சுகளை முன்வைக்க வேண்டும்- மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவேன்: பாலித

பஸ் பயணத்தில் மோசடிகள் - அவதானமாக இருக்குமாறு கோரிக்கை - சமயபாடங்களுக்கு உதவிக்கல்விப் பணிப்பாளர்...
[ ஞாயிற்றுக்கிழமை, 21 யூலை 2013, 02:34.45 PM GMT ]
பொது பயணிகள் பஸ்களில் பயணிக்கும் போது, வழங்கப்படுகின்ற பயண கட்டணத்துக்கான பற்றுசீட்டினை பரீட்சித்துக் கொள்ளுமாறு பொது மக்கள் கோரப்பட்டுள்ளனர்.
மாத்தறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது, போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கம இந்த தகவலை வெளியிட்டார்.
பஸ்களில் வழங்கப்படுகின்ற பயண கட்டணத்தின் பெறுமதிக்கு அதற்கான பற்றுசீட்டுகள் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் கட்டணத்துக்குரிய பெறுமதியில் பஸ் பற்று சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதா? என்பதை பரீட்சித்துக் கொள்ளுமாறும் அவர் கோரியுள்ளார்.
சமயபாடங்களுக்கு உதவிக்கல்விப் பணிப்பாளர் பதவியினை உருவாக்க கோரி மனு கையளிப்பு
வடமாகாணத்தின் 12 கல்வி வலயங்களிற்கும் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ சமயங்களிற்கான சமய பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் பதவியணியினை உருவாக்குமாறு கோரி, வடமாகாண கல்விப் பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கைக் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளதாக வலிகாம வலய ஆசிரிய ஆலோசகர் என்.பி ஸ்ரீந்திரன் அறிவித்துள்ளார்.
வடமாகாணத்தில் 12 கல்வி வலய சமய பாட சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்களும் கையொப்பமிட்டு கடந்த 5ஆம் திகதி கையளிக்கப்பட்டுள்ள அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தென்னிலங்கை மத்திய மாகாணம் ஆகிய பிரதேசங்களிலுள்ள கல்வி வலயங்களில் பௌத்த சமயத்திற்கு பௌத்த சமய பாட உதவிக்கல்விப் பணிப்பாளர் பதவி இருப்பது போல வடமாகாணத்தின் 12 கல்வி வலயங்களிற்கும் மேற்படி பதவியணியினை உருவாக்குமாறும் அதற்கான சட்ட அதி காரம் மாகாணக்கல்வி அமைச்சுக்கு உண்டு எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்து சமய மாணவர்களையும் இந்து சமயம் கற்பிக்கும் ஆசிரியர்களையும் பெருந்தொகையாகக் கொண் டுள்ள வடமாகாணப் பாடசாலைகளிற்கு இந்து சமயப் பாட உதவிக் கல்விப்பணிப்பாளர் பதவி இந்து சமயப் பாட உதவிக் கல்விப்பணிப்பாளர் பதவி அவசியம் எனவும் இது பாட ரீதியான வேலைத்திட்டங்களை வலயங்கள் முன்னெடுக்க பேருதவியாக அமையும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறே கிறிஸ்தவ இஸ்லாம் பாடங்களைக் கற்கும் மாணவர்களும் கற்பிக்கும் ஆசிரியர்களும் வட மாகாணத்தில் குறிப்பிடத்தக்க அளவில் காணப்படுவதால் இப்பதவியணியினை உருவாக்குவது நன்மையானதாகவும் அமையும் எனவும் குறிப்பிட்டப் பட்டுள்ளது.
மாகாணகல்வி அமைச்சுக்கள் தமக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மேற்படி பதவி யணியினை உருவாக்கலாம் என்பதற்கு மத்திய மாகாணக் கல்வி அமைச்சு முன்னுதாரணமாகவுள்ளது.
அம்மாகாணத்தில் இந்து சமய உதவிக்கல்விப்பணிப்பாளர் பதவி உருவாக்கப்பட்டுள்ளதெனவும், அதன் நிய மனக்கடித்தப் பிரதி செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ள அறிக்கை கடிதத்ததுடன் சான்றாக இணைக்கப்பட்டுள்ளது எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்படி விடயங்களை உள்ளடக்கிய கோரிக்கைக் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட செயலாளர் இவ்விடயம் தொடர்பில் உரியவர்களுடன் கலந்துரையாடிச் சாதகமான முடிவினைத் தெரிவிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபைத் தேர்தலுக்கு முன் தெரிவுக்குழுவின் சிபார்சுகளை முன்வைக்க வேண்டும்- மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவேன்: பாலித
[ ஞாயிற்றுக்கிழமை, 21 யூலை 2013, 01:53.30 PM GMT ]
வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடந்து முடியும் முன்பு, தேசியப் பிரச்சினைக்கு தீர்வுகளை முன்வைக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் பணிகளை நிறைவு செய்து தீர்வொன்றை முன்வைக்குமாறு ஜாதிக ஹெல உறுமயவின் பிரதிச் செயலாளரும் மேல் மாகாண சபை அமைச்சருமான உதய கம்மன்பில கேட்டுள்ளார். 
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்ற தெரிவுக்குழு ஆறு மாதம் காலம் இந்த தீர்வு விடயம் தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளது.
எனினும் 13வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தில் புதிய மாற்றங்களை கொண்டு வரவேண்டுமானால், வடக்கு மாகாண சபை ஸ்தாபிக்கப்படுவதற்கு முன்னர், தெரிவுக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும் என கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.
மாகாண சபைத் தேர்தலில் கட்டாயம் போட்டியிடுவேன்- பாலித ரங்கே பண்டார
எதிர்வரும் வடமேல் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் மாற்று அணி சார்பில் கட்டாயம் போட்டியிட போவதாக இந்த கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
வெளிநாடு சென்று நாடு திரும்பியுள்ள அவர், மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசியக்கட்சி எனக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை நடத்த உத்தரவிட்டுள்ளது.
நான் ரணில் விக்ரமசிங்கவிடம் மன்னிப்பு கோரும் பேச்சுவார்த்தை ஒன்று நேரத்தை ஒதுக்குமாறு கேட்டதாக வதந்தி ஒன்று பரவியுள்ளது. ரணிலிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் எழுத வேண்டிய தேவை எனக்கில்லை.
ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த அழிவு நிலமைக்கு காரணமான ரணில் விக்ரமசிங்கவே மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten