தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 22 juli 2013

தமிழ்மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து அடுத்த நிலைக்கு கொண்டுசெல்லும் ஆற்றல் மிக்கவர் விக்கினேஸ்வரன்! - க.அமிர்தலிங்கம்

அனர்த்த முகாமைத்துவ திட்டம் குறித்து கலந்துரையாடல்: யாழில் 13 செயற்றிட்டங்கள் மேற்கொள்ள நடவடிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 21 யூலை 2013, 02:56.08 PM GMT ]
யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திட்டத்தை தயாரித்து நடைமுறைப்படுத்துவது சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்று யாழ்.செயலகத்தில் நடைபெற்றது.
கலந்துரையாடல் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத் துவக்குழுவின் தலைவரும், யாழ். அரச அதிபருமாகிய சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் மூன்று முக்கிய விடயம் குறித்து தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அவசர பதிலிறுத்தலின் போது நடைமுறைப்படுத்த வேண்டிய விடயம் சம்பந்தமாகவும், அதற்கான பொறிமுறை பற்றியும் ஆராயப்பட்டது.
இரண்டாவதாக அனர்த்த முகாமைத்துவ உப குழுக்களின் பொறுப்பும், கடமையும் பற்றி ஆராயப்பட்டதுடன், அதனை மேம்படுத்தும் நோக்கில் ஆலோசனைகளுக்கு அமைவாக சகல பிரதேச செயலகங்களுக்கும் திட்ட வரைபுகள் வழங்கப்படும். எதிர்வரும் 31 ஆம் திகதிக்குப் முன்னர் இதனைப் பூரணப்படுத்தி செயலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
மூன்றாவதாக 2013 ஆம் ஆண்டு எதிர்வரும் மழைக்காலத்திற்கு முன்னர் 50 மில்லியன் நிதி ஒதுக்கீட்டைக் கொண்டு 13 செயற்திட்டங்கள் யாழ் மாவட்டத்தில் மேற் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் 2014 ஆம் ஆண்டு அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயற்திட்ட முன்மொழிவுகள் முன்னிலைப்படுத்தப்பட்டு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அனுப்பிவைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தக்கலந்துரையாடலில் யாழ்.மேலதிக அரசஅதிபர் ரூபினி வரதலிங்கம், அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப் பாளர் எஸ்.ரவி, பிரதேச செயலர்கள், பொலிஸ் மற்றும் முப்படை அதிகாரிகள் கலந்து கொண்டு தமது ஆலோசனைகளை முன் வைத்தனர்.
தமிழ்மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து அடுத்த நிலைக்கு கொண்டுசெல்லும் ஆற்றல் மிக்கவர் விக்கினேஸ்வரன்! - க.அமிர்தலிங்கம்
[ ஞாயிற்றுக்கிழமை, 21 யூலை 2013, 03:06.48 PM GMT ]
தமிழ் மக்களது பிரச்சனைகளை சரியான முறையில் இனங்கண்டு மக்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் ஆற்றல் மிக்கவரே சி.வி. விக்கினேஸ்வரன்.
மேற்படி, வவுனியா தமிழரசுக்கட்சி உறுப்பினரும், ஓமந்தை கமநல அபிவிருத்தி திணைக்கள தலைவரும், திடீர் மரணவிசாரணை அதிகாரியுமான க. அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிவடைந்த நான்கு ஆண்டுகள் கடந்த நிலையிலும் தமிழ் மக்களது பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை. மாறாக நில அபகரிப்பு, சிங்களமயமாக்கல் என பல்வேறு பிரச்சனைகளுக்கு தமிழ் மக்கள் முகம் கொடுத்து வரும் இந் நிலையில் இலங்கை அரசாங்கம் 13வது திருத்தச் சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முயன்று வரும் அதேவேளை வடமாகாணசபை தோ்தலையும் அறிவித்துள்ளது.
உலக நாடுகளும் ஊடகங்களும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்த நிலையில் முதலமைச்சர் வேட்பாளார்களாக எமது தமிழரசுக் கட்சியின் செயலாளார் மாவை சேனாதிராஜா, உயர் நீதிமன்ற முன்னாள் பிரதம நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆகியோரது பெயர்கள் பாரிந்துரைக்கப்பட்டது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளுக்குள் இடம்பெற்ற பல்வேறு வாத பிரதிவாதங்களுக்கு மத்தியில் சி.வி.விக்கினேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக தெரிவாகியுள்ளார்.
இவரே முதலமைச்சர் வேட்பாளருக்கு தகுதியானவர். எமது வவுனியா மாவட்ட மக்களும் அவரை ஏற்றுக்கொள்வதுடன் அவர் மீது நம்பிக்கை கொண்டவர்களாகவும் உள்ளனர் என மேலும் க.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten