[ ஞாயிற்றுக்கிழமை, 21 யூலை 2013, 01:25.50 PM GMT ]
யாழ். பல்கலைக்கழகத்திற்கு பின் புறமாக உள்ள கம்பஸ் லேனில் தனியார் வீடு ஒன்றை வாடகைக்கு பெற்று சிங்கள மாணவிகள் தங்கி கல்வி கற்று வருகின்றனர்.
நேற்று நள்ளிரவு மது போதையில் குறித்த வீட்டுக்கு சென்ற சிலர் கத்தி கூச்சலிட்டதுடன், வாயில் கதவையும் தள்ளி திறக்க முற்பட்டுள்ளனர்.
கதவை திறக்க முடியாது போனமையினால் வீட்டுக்கு கற்கள் மற்றும் வெற்று மது போத்தல்கள் என்பவற்றை வீசியுள்ளார்கள்.
இதனால் வீட்டு யன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளதுடன் வீட்டின் முன்பகுதி முழுவதும் வீசப்பட்ட போத்தல்களின் கண்ணாடிகள் சிதறியுள்ளன.
இச் சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு மாணவிகளால் அறிவிக்கப்பட்டதை அடுத்து நிர்வாகத்தினால் அங்கு தங்கியிருந்த 16 தென்னிலங்கை மாணவிகளும் பாதுகாப்பாக யாழ். பல்கலைக்கழக விடுதிக்கு இடம் மாற்றப்பட்டுள்ளார்கள்.
இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ். மாவட்டம் முழுமையாக இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளது- வீடொன்றை சேதப்படுத்திய இராணுவ அதிகாரி கைது
[ ஞாயிற்றுக்கிழமை, 21 யூலை 2013, 12:34.07 PM GMT ]
கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாண ஆளுநரும் முன்னாள் இராணுவ அதிகாரியாக உள்ளார்.
வடக்கில் நடைபெறும் வைபங்கள், பாடசாலைகளில் நடைபெறும் வைபவங்கள் போன்றவற்றை நடத்த அருகில் உள்ள இராணுவ முகாம்களில் அனுமதி பெறுவது கட்டாயமாகும்.
காணி பிரச்சினைகள் உட்பட பல பிரச்சினைகளில் இராணுவத்தின் தலையீடு உள்ளது. கைது செய்யப்படுவோம் அல்லது காணாமல் போக செய்யப்படுவோம் என்ற அச்சமான மனநிலையில் வடபகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
அதேவேளை எவ்விதமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படாத நிலையில், பல இளைஞர்கள் பொலிஸ் அல்லது இராணுவத்தின் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் வடக்கில் உள்ள பாடசாலைகளுக்கு மின்சார வசதிகள் இல்லை. உதாரணமாக கிளிநொச்சியில் உள்ள சில பாடசாலைகளில், மின்சார கட்டணத்தை செலுத்தாத காரணத்தினால் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
சில குழுக்கள் இந்த விடயங்களை பயன்படுத்தி, வடக்கில் மக்கள் மத்தியில் இன பேதங்களை ஏற்படுத்த முயற்சிப்பார்கள்.
இதேவேளை மதங்களுக்கு இடையில் பதற்றங்களை ஏற்படுத்துவதற்காக முஸ்லிம்களுக்கு எதிராக சில குழுக்கள் இயக்கப்பட்டு வருகின்றன என்றார்.
வீடொன்றை சேதப்படுத்திய இராணுவ அதிகாரி கைது
வான் ஒன்றில் சிலருடன் சென்று காலி நாகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றை தாக்கி சேதப்படுத்தி, வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியையும் சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் இராணுவ லான்ஸ் கோப்ரல் ஒருவரை நாகொட பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர்.
நியாகம என்ற பிரதேசத்தில் உணவகம் ஒன்றில் இரண்டு தரப்புக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தை அடுத்து, சந்தேக நபர் சிலரை அழைத்து சென்று இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் நடத்திய தாக்குதல் காரணமாக 30 ஆயிரம் ரூபாவுக்கும் மேல் சேதம் ஏற்பட்டுள்ளது என பொலிஸில் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட இராணுவ அதிகாரி சில தினங்களுக்கு முன்னர், மாபலகம பிரதேசத்தில் மதுபோதையில், குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு, எச்சரிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று கைதுசெய்யப்பட்ட லான்ஸ் கோப்ரல் இன்று நீதவான் முன்னிலையி்ல் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten