தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 16 juli 2013

பொதுநலவாய மாநாடு இலங்கையின் கௌரவத்தை அதிகரிக்கும்!- ஜீ.எல்.பீரிஸ்

வாக்காளர்கள் விரும்பிய வாக்குசாவடியில் வாக்களிக்க அனுமதி: தேர்தல் செயலகம்
[ செவ்வாய்க்கிழமை, 16 யூலை 2013, 01:58.13 AM GMT ]
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகும் வாக்காளர்கள், எந்த வாக்குச் சாவடியிலும் வாக்களிப்பதற்கான அனுமதியை பெற முடியும் என்று தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய இதனை அறிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தல்களில் வாக்காளர் ஒருவர் அவர் வசிக்கின்ற பிரதேசத்துக்குறிய வாக்குசாவடியிலேயே வாக்களிக்க முடியும் என்ற நிலை காணப்பட்டது.
எனினும் தகுந்த காரணங்களை சுட்டிக்காட்டி, அவர் மாற்று வாக்குசாவடி ஒன்றில் வாக்களிப்பதற்கு அனுமதி பெற முடியும் என்று தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
1988ம் ஆண்டு உருவாக்கப்பட்ட மாகாண சபைகள் சட்டத்தின், 1993ம் ஆண்டு திருத்தப்பட்ட ஏழாம் இலக்க சட்டத்தின் 125 ஏ சரத்தின் கீழ் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுநலவாய மாநாடு இலங்கையின் கௌரவத்தை அதிகரிக்கும்!- ஜீ.எல்.பீரிஸ்
[ செவ்வாய்க்கிழமை, 16 யூலை 2013, 01:56.19 AM GMT ]
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாடு, இலங்கையின் கௌரவத்தை மேலும் உயர்த்தும் என்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் இந்த மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளது.
இதற்கான ஏற்பாட்டு குழுவின் முதலாவது செய்தியாளர் சந்திப்பு நேற்று இடம்பெற்றது.
இதில் உரையாற்றிய அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இந்த வருடம் பொதுநலவாய நாடுகளின் தலைமைத்துவத்தை இலங்கை பொறுப்பேற்கவுள்ளது.
இது இலங்கையின் கௌரவத்தை மேலும் அதிகரிப்பதாக அமைகிறது.
தலைமைத்துவத்தை ஏற்கும் போது, இலங்கையில் பொதுநலவாய நாடுகளை தனக்கு சாதகமான வகையில் பயன்படுத்திக் கொள்ளாது என்றும், நடுநிலையாக நடந்துக் கொள்ளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் போது இந்த மாநாட்டுக்கான செலவுகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.
இதற்கு பதில் வழங்க மறுத்த அமைச்சர், எந்த விடயத்தையும் நன்மையான பக்கத்தை பார்க்குமாறு கோரினார். 

Geen opmerkingen:

Een reactie posten