நேற்று முந்தினம்(செவ்வாய்கிழமை) மாலை தாய்லாந்துப் பொலிசார் ஒரு சிங்களவரை கைதுசெய்துள்ளார்கள். பொலிசார் சிவில் உடையில் சில காலம் அவரைப் பின் தொடர்ந்து, அதன் பின்னரே அவரைக் கைதுசெய்தாகத் தெரிவித்துள்ளார்கள். தாய்லாந்தில் உள்ள பத்தையா என்னும் நகரில் வேலை இருப்பதாகக் கூறி, சுமார் 3 இலங்கையரை மேற்குறிப்பிட்ட நபர் அழைத்துவந்துள்ளார். இம் மூவரிடம் இருந்தும் இச் சிங்களவர் பல லட்சம் ரூபாயைக் கறந்துள்ளார். உல்லாசப் பயணிகளுக்கான விசா காலாவதியாகி நிலையில் அம் மூவரையும் அங்கே தவிக்கவிட்டு, மேற்படி அந்த சிங்கள நபர் தலைமறைவாகிவிட்டார். இதனால் அம் மூவரும் இருக்க இடம் இன்றி உண்ண உணவும் இன்றி அல்லாடியுள்ளார்கள். அயலவர்களிடம் உணவு கேட்டு அலைந்து திரிந்துள்ளார்கள்.
இறுதியில் தாய்லாந்துப் பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்கள். மூவர் கொடுத்த முறைப்பாட்டையடுத்து தாய்லாந்துப் பொலிசார் அவரைத் தேடிப் பிந்தொடர்ந்து கைதுசெய்துள்ளார்கள்(வீடியோ இணைப்பு)
Geen opmerkingen:
Een reactie posten