மாகாணசபை முறைமையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும்!கெஹலிய - ஆணைக்குழுவின் 53 பரிந்துரைகளை நிறைவேற்ற அரசு முடிவு
[ வெள்ளிக்கிழமை, 05 யூலை 2013, 02:31.18 AM GMT ]
25 ஆண்டுகளுக்கு முன்னதாக நிறுவப்பட்ட மாகாணசபை முறைமையின் காணி, பொலிஸ் அதிகாரங்கள் உள்ளிட்ட சகல விடயங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.
மாகாணசபை முறைமைய இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளின் அடிப்படையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டது.
இது தொடர்பில் இந்திய அரசாங்கத்திற்கு ராஜதந்திர ரீதியில் விளக்கமளிக்கப்படும்.
13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ச, இந்திய அரசாங்கத்திற்கு விளக்கமளிக்க உள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேசத்தை ஏமாற்ற சில சிபார்சுகளை அமுல்படுத்த மஹிந்த அரசு முடிவு
அனைத்துலகத்தை ஏமாற்றும் பல திட்டங்களில் ஒன்றாக மஹிந்த ராஜபக்ச தலைமையிலான போர்க்குற்ற அரசாங்கம் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு எனும் அரச சார்புக் குழுவின் சிபார்சுகள் சிலவற்றை நடைமுறைப்படுத்தவுள்ளது.
மொத்தமாக 53 சிபார்சுகளை செயற்படுத்துவதற்கு மஹிந்த அரசு தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த சிபார்சுகளில் கிழக்கு முஸ்லிம் சமூகம் தொடர்பான பிரச்சினைகள், சர்வதேச மனிதாபிமான சட்ட விவகாரங்கள், மனித உரிமை, வடக்கு, இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பான விடயங்கள் உள்ளடங்குவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.
இலங்கையில் 13வது சட்டத்திருத்தம் நீர்த்துப் போக இந்தியா அனுமதிக்காது!- அமைச்சர் நாராயணசாமி
[ வெள்ளிக்கிழமை, 05 யூலை 2013, 12:23.13 AM GMT ]
இந்திய இலங்கை உடன்பாட்டின் கீழ் மாகாண சபைகளை அமைக்கவும் அவற்றுக்கு அதிகாரங்களை பகிர்ந்து அளிக்கவும் ஏற்பட்ட அந்த உடன்பாட்டையும், சட்டத் திருத்தத்தையும் இலங்கை அரசு ஒருதலைப்பட்சமாக திருத்த முடியாது என்று பிபிசிக்கு வழங்கிய சிறப்புப் பேட்டியில் அவர் தெரிவித்தார்.
அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு, இலங்கையிலுள்ள அனைத்து மக்களும் சம உரிமையுடன் வாழ்வதையே இந்தியா விரும்புகிறது என்றும் கூறும் அவர் இது இலங்கை அரச தரப்பினரிடம் பல முறை கூறப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
ராஜீவ் காந்தி மற்றும் ஜெயவர்த்தன ஆகியோரிடையே ஏற்பட்ட ஒப்பந்தமும் அதன் மூலம் ஏற்படுத்தப்பட்ட இலங்கை அரசியல் சாசனத்தின் 13வது சட்டத் திருத்தமும் நீர்த்துப் போக நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகக் கூறப்படுவது குறித்து இந்தியா அதிருப்தி அடைந்துள்ளது எனவும் அவர் கூறுகிறார்.
இலங்கை அரசு ஒரு நாடாளுமன்றத் தேர்வுக் குழுவை அமைத்து அதன் மூலம் இந்தச் சட்டத் திருத்தம் குறித்து விவாதிக்கவுள்ளது என்பதே, அந்தச் சட்டத் திருத்தத்தை நீர்த்துப் போகச் செய்யும் ஒரு நடவடிக்கையாகவே இந்தியாவால் பார்க்கப்படுகிறது என்றும் கூறுகிறார் அமைச்சர் நாராயணசாமி.
சில மாதங்களுக்கு முன்னர் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்தியாவுக்கு விஜயம் செய்தபோது கூட, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கையில் அதிகாரப் பகிர்வை கொண்டுவரும் 13வது சட்டத் திருத்ததை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் எனவும் அமைச்சர் நாராயணசாமி தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.
Geen opmerkingen:
Een reactie posten