கே.பி- தமிழினி- தயா மாஸ்டர் மூவரும் வேட்பாளாரக விண்ணப்பம் !
04 July, 2013 by admin
இதுகுறித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கையில், வடக்கு, வட - மேற்கு மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்களுக்கென நியமனம் கோரி விண்ணப்பித்தவர்களை கட்சியின் வேட்பாளர் நியமனக் குழு நேர்முகத் தேர்வு நடத்தும் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் மூவரும் அதன் முன்னிலையில் சமூகமளிக்குமாறு வேண்டப்படுவரென தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் நியமனக் குழு எதிர்வரும் சனிக்கிழமை நேர்முகத் தேர்வுகளை நடத்த ஆரம்பிக்கவுள்ளது. இந்த வார இறுதியில் வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகள் கலைக்கப்படவுள்ள நிலையில் எதிர்வரும் செப்டெம்பரில் மூன்று மாகாணங்களிலும் தேர்தல்கள் நடத்தப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
அமைச்சர் இதுபற்றி தொடர்ந்தும் கூறுகையில்,
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணி உறுப்பினர்கள் மூவரும் புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இலங்கையின் எந்தவொரு சட்ட நீதிமன்றத்திலும் தண்டிக்கப்பட்டிருக்கவில்லை. எனவே, வட மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான அவர்களின் விண்ணப்பங்களை நாம் எதற்காக கவனத்திற்கு எடுக்கக் கூடாதென்பது என்பது குறித்து எனக்கு விளங்கவில்லை’ என விபரித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் அவர்களுக்கு வேட்பாளர் நியமனங்கள் வழங்கப்படும் முன்னர் முதலில் அவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினதோ அல்லது அதன் பங்காளிக் கட்சியொன்றினதோ உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்.
அதேவேளையில் வட மாகாண சபைத் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொள்கை விளக்கத்தை தயாரிப்பதில் தயா மாஸ்டர் உதவப் போவதாக செய்திகள் தெரிவித்துள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் தமிழ் மக்களால் எதிர்நோக்கப்பட்டு வரும் பிரச்சினைகளை இனங்கண்டுள்ளதாகவும், இத்தகைய பிரச்சினைகளுக்கான தீர்வுகள் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேற்படி தேர்தல் விஞ்ஞாபன தயாரிப்புப் பணிகளில் தானும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவும் மற்றும் அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய ஆளுங்கட்சி உறுப்பினர்களும் மும்மூரமாக ஈடுபட்டு வருவதாகவும் தயா மாஸ்டர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
என்ன ஒரு காம்பிநேஷன் ! காபியில் பண்ணை அமுக்கடா, அந்த கம்பிநேஷன் ரெம்ப தூளுடா !
புலிகளுக்கு இராணுவத் தொழில்நுட்பங்களை வழங்கியதை ஒப்புக்கொண்டார் !
04 July, 2013 by admin
நியூயோர்க், புரூக்லின் நீதிமன்றத்தில், சுரேஸ் சிறீஸ்கந்தராஜா, நேற்று முந்தினம் நடத்தப்பட்ட விசாரணையின் போது விடுதலைப் புலிகளுக்குத் தாம் இராணுவத் தொழில்நுட்பங்களை பெறுவதற்கு உதவியதை ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து அவருக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது. 2006 இல் ரொரொன்ரோவில் கைது செய்யப்பட்ட சுரேஸ் சிறீஸ்கந்தராஜா, ஏற்கனவே சிறையில் இருந்து வருவதால், அவரது தண்டனைக்காலம் குறைக்கப்பட வாயப்புகள் உள்ளதாக கனேடிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் பிறந்து கனேடியக் குடியுரிமை பெற்ற இவர், தண்டனைக்காலம் முடிந்த பின்னர் அமெரிக்காவில் இருந்து கனடாவுக்கு நாடு கடத்தப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten