தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 21 juli 2013

இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை கைது செய்ய பாரிய நடவடிக்கை! 20க்கும் மேற்பட்டோர் கைது!

முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழுவுடன் அமெரிக்க இராஜதந்திரி சந்திப்பு.
[ சனிக்கிழமை, 20 யூலை 2013, 08:04.43 PM GMT ]
கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றும் முக்கிய இராஜதந்திரி ஒருவர் அண்மையில் வன்னி பகுதிக்குச்சென்று முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழுவினருடனும் ...
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட ஆதரவாளர்களுடனும் சமகால நிலைவரங்கள் தொடர்பில் பேச்சுகளை நடத்தியுள்ளமை சிறீலங்கா அரசுக்கு கடும் கோபத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அதிகாரி மைக்கேல் ஏர்வின் அண்மையில் கிளிநொச்சி முல்லைத்தீவு பகுதிகளுக்கு பயணத்தை மேற்கொண்டு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஆதரவாளர்களுடனும் பிரஜைகள் குழுவினருடனும் இருவேறு சந்திப்புகளில் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.
பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் நடைபெற்ற சந்திப்பில் முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழுவினர் ஆதிக்க சக்திகளால் பறி போகின்ற தமது நிலம் கடல் வளம் பற்றியும் தமிழ் எல்லைக்கிராமங்கள் சிங்கள கிராமங்களாக்கப்படுவது பற்றியும் தமிழரின் பூர்வீக நிலபுலங்களை இராணுவ தேவைக்காக பறித்தெடுத்துக்கொண்டு விருப்பத்துக்கு மாறாக வேறொரு இடத்தில் கொண்டு சென்று மக்களை குடியமர்த்தும் மீள்குடியேற்றம் பற்றியும் தமிழ் கிராமங்களுக்கு சிங்கள பெயர்களைச்சு10ட்டி தமிழரின் வாழ்வியல் பண்பாட்டுக்கூறுகளை சிதைக்கும் சிங்கள மேலாதிக்க மனோநிலை பற்றியும் தமிழர் பிரதேசத்தில் நடைபெறும் சிங்கள அதிகாரிகளின் முறையற்ற அரச நியமனங்கள் பற்றியும். சட்டவிரோதமாக காடுகளையழித்து நடைபெறும் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை தோற்றுவிக்கும் குடியேற்றங்கள் பற்றியும் இயற்கை வளச்சுரண்டல்கள் பற்றியும் சிவில் சமுக செயல்பாடுகளில் இராணுவ தலையீடுகள் கெடுபிடிகள் பற்றியும் புள்ளிவிவரங்களுடன் எடுத்துக்கூறியிருந்தனர்.
கிளிநொச்சியில் கூட்டமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் வடக்கு மாகாண சபை தேர்தல் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகள் வேட்பாளர்களின் பாதுகாப்பு குடியியல் நிர்வாகத்தில் இராணுவ தலையீடு உள்ளிட்ட விடையங்கள் குறித்து கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் எடுத்துக்கூறியிருந்தனர்.
இந்த கலந்துரையாடல்கள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறீலங்கா அரசின் பாதுகாப்புத்துறை மூத்த அதிகாரி ஒருவர் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டு தலையீடுகள் இருப்பதை தாம் விரும்பவில்லை எனவும் புள்ளி விவரங்களுடன் தகவல்கள் அமெரிக்காவுக்கு வழங்கப்பட்டுள்ளமை சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும் இவை தொடர்பில் தாம் கவலை கொண்டுள்ளதாகவும் தம்மிடம் முன் அனுமதி பெற்றே இராஜதந்திரிகள் வடக்கு பகுதிக்கு சென்று சமுக மற்றும் அரசியல் பிரதிநிதிகளுடன் சந்திப்புகளை நடத்த வேண்டுமெனவும் கடுமையாக பொரிந்து தள்ளியுள்ளார்.
அதேவேளை சிறிலங்கா அரசாங்கத்தின் இந்தக் கவலை குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க தூதரகப் பேச்சாளர் உலகம் முழுவதிலும் உள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் அந்தந்த நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று ஆய்வை நடத்துவது வழக்கமான பணியே என்றும் அதுபோன்றே சிறிலங்காவிலும் செயற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ச்சியாக நாம் உள்ளூர் அரச அதிகாரிகள் குடியியல் சமூகத்தினர்தனியார்துறையினரை சந்தித்து வருகிறோம். இதன்மூலம் தற்போதைய நிலைமையை நன்றாக விளங்கிக் கொள்ள முடிகிறது.
வடக்கு மாகாணசபைத் தேர்தல் சுதந்திரமாகநீதியாகவன்முறைகளின்றி கருத்து வெளிப்பாட்டு அடிப்படைச் சுதந்திரத்தை பாதுகாக்கும் வகையில் நடக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை கைது செய்ய பாரிய நடவடிக்கை! 20க்கும் மேற்பட்டோர் கைது!
[ சனிக்கிழமை, 20 யூலை 2013, 08:33.34 PM GMT ]
வீசா காலம் முடிவடைந்த நிலையில் நாட்டுக்குள் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களைக் கைது செய்வதற்கான பாரிய வேலைத்திட்டமொன்றை இலங்கை அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.
இத் திட்டத்தை இலங்கை குடிவரவு குடியகல்வுத் திணைக்களம், தேசிய புலனாய்வுப் பிரிவு, இலங்கை பொலிஸ் திணைக்களம் ஆகியன இணைந்து ஆரம்பித்துள்ளதென குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதான கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
வீசா காலம் முடிவடைந்த நிலையில் நாட்டில் தொடர்ந்தும் தங்கியிருந்தபடி வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதும், தொழில்புரிவதிலும் வெளிநாட்டவர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிய வந்துள்ளன. இதையடுத்து 20க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடல் மார்க்கமாக நாட்டுக்குள் வந்தவர்களும் இருப்பதாக நம்பப்படுகிறது. இதற்கு முன்னரும் இவ்வாறு கடல்மார்க்கமாக வந்தவர்களும் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இவ்வாறு கைதுசெய்யப்படுபவர்கள் மிரிஹானவில் அமைக்கப்பட்டுள்ள விசேட முகாமுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். இத்தடுப்பு முகாமில் ஈரான், சீனா, தாய்லாந்து, இந்தியா மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 39 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இத்தடுப்பு முகாமில் இடநெருக்கடி ஏற்படுவதால் மினுவாங்கொட பகுதிக்கு இம்முகாமை மாற்றுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியிருப்பதாகவும் குறிப்பிட்ட குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதான கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா, இத்தடுப்பு முகாமின் கட்டட நிர்மாணப் பணிகளை கட்டட நிர்மாணத் திணைக்களம் மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறினார். சுற்றுலா வீசாவில் இலங்கைவந்து தொழில் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் அதிகளவில் வடக்கு, கிழக்கு மாகாணங் களிலேயே வெளிநாட்டவர்கள் தங்கியிருப் பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக சிறிவர்த்தன தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வயல் வேலைகளில் ஈடுபடுவதுடன், சிலர் புடவை வியாபாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். வீசா காலம் முடிவடைந்த நிலையிலிருக்கும் இவர்களை கைது செய்யும் நடவடிக்கையை பொலிஸ் திணைக்களம் அந்தந்த பொலிஸ் நிலையங்களின் ஊடாக மேற்கொண்டு வருகிறது.
சுற்றுலா வீசாவில் நாட்டுக்குள் வந்து தொழில் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். எனினும், இவர்கள் சுற்றுலா வீசாவில் வருகை தந்து தொழில் புரிவது மட்டுமல்லாமல், வீசா முடிவடைந்த நிலையில் நாட்டுக்குள் தங்கியிருக்கிறார்கள். இந்நடவடிக்கை பாரதூரமான குற்றமாகும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten