[ ஞாயிற்றுக்கிழமை, 21 யூலை 2013, 01:37.16 AM GMT ]
கிளிநொச்சி இரணை மடு இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினர் இரண்டுபேர் நேற்று சனிக்கிழமை நண்பகல் அப்பகுதியில் இருந்த பாழடைந்த கிணறு ஒன்றில் தண்ணீர் இறைத்துவிட்டு மீன்பிடிக்க முயன்றுள்ளனர்.
மீன்பிடிப்பதற்காக அவர்கள் இருவரும் கிணற்றுக்குள் இறங்கியிருந்த நிலையில், எதிர்பாராதவிதமாக கிணறு இடிந்து விழுந்துள்ளது.
இச்சம்பவத்தில் இராணுவ சிப்பாயொருவர் இடிபாடுகளுக்குள் புதையுண்டு உயிரிழந்துள்ளார்.
சுகத் அமரசிங்க (26 வயது) என்ற சிப்பாயே உயிரிழந்தவராவார். இவரது சடலம் கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இவருடன் கிணற்றினுள் இறங்கிய மற்றுமொரு சிப்பாய்
இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்துள்ள நிலையில் கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்துள்ள நிலையில் கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மகாநாயக்கர்களுக்கு மதிப்பில்லை! கிறித்தவ கர்தினால்களை மதிக்கும் அரசாங்கம்: பொதுபலசேனா குற்றச்சாட்டு!
[ ஞாயிற்றுக்கிழமை, 21 யூலை 2013, 01:18.09 AM GMT ]
பௌத்த மதத்தின் சங்கைக்குரிய மகாநாயக்க தேரர்களைவிட கிறித்தவத்தின் கர்தினால்களுக்கு அரசாங்கம் அதிக மரியாதை அளிப்பதாக பொதுபல சேனா பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றம் சாட்டியுள்ளார்.
குருநாகல் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுபல சேனா மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்ட கருத்தைத் தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
மாகாண சபைகளின் காணி, பொலிஸ் அதிகாரங்கள் நீக்கப்பட வேண்டும் அல்லது மாகாண சபை முறை முற்றாக அகற்றப்பட வேண்டும் என்று அண்மையில் மகாநாயக்க தேரர்கள் அரசாங்கத்திடம் கூட்டாக வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
எனினும் அதன் பின்னர் கிறித்தவ கர்தினால் ஒருவர் மாகாண சபை தேர்தல்களை நடத்தும்படி அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரின் வேண்டுகோளுக்கு ஏற்ப அரசாங்கம் தற்போது மாகாண சபைத் தேர்தல்களை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
இதன் மூலம் மகாநாயக்க தேரர்களின் வேண்டுகோளை அரசாங்கம் தெளிவாக உதாசீனம் செய்து அவர்களை அவமானப்படுத்தியுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten