தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 24 juli 2013

இலங்கை கப்பல் ஐக்கிய அரபு இராச்சிய கடற்பகுதியில் மூழ்கியது- அவுஸ்திரேலிய கடலில் 170 பேருடன் சென்ற படகு மூழ்கியது- 3பேர் பலி!

இலங்கையின் கொடியுடன் பயணித்த கப்பல் ஒன்று ஐக்கிய அரபு இராச்சிய கடற்பகுதியில் விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியது.
இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. எனினும் தற்போதே அது தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன.
குறித்த கப்பல் ஐக்கிய அரபு இராச்சியத்தின் உம் அல் குவேவென் துறைமுகப் பகுதியில் கொமரோஸ் தீவுகளுக்கு சொந்தமான கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானது.
எனினும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டு இரண்டு கப்பல்களிலும் இருந்த 30 பணியாளர்களும் மீட்கப்பட்டதாக செய்தி சேவை ஒன்று தெரிவிக்கிறது.
சம்பவத்தின்போது இலங்கைக் கொடியை தாங்கிய கப்பல் மூழ்கிய அதேநேரம் கொமரொஸ் தீவுகளின் கப்பல் பழுதடைந்தது.
இலங்கையின் கப்பலில் ஏற்பட்ட இயந்திர கோளாறே இந்த விபத்துக்கான காரணம் எனறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய கடலில் 170 பேருடன் சென்ற படகு மூழ்கியது!- 60 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அச்சம்
அவுஸ்திரேலிய இந்தோனேசிய கடற்பரப்பில் நேற்று இரவு இலங்கை அகதிகள் உள்ளிட்ட படகு ஒன்று மூழ்கியுள்ளது.
இந்த படகு மூழ்கும் போது அதில் 170 பேர் இருந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் இலங்கையர்களும் ஈரானியர்களாகும் என்று அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி இதுவரை குழந்தைகள் பெண்கள் உட்பட்ட 60 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை வெளியான தகவலின்படி இரு குழந்தைகள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
120 பேர்வரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். புடகில் ஏற்பட்ட இயந்திரகோளாறே விபத்துக்கான காரணம் என்று அறியப்படுகிறது.
இதேவேளை மேலும் 60 பேரைக் கொண்ட படகு ஒன்று நேற்று கிறிஸ்மஸ் தீவை சென்றடைந்துள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten