[ புதன்கிழமை, 24 யூலை 2013, 12:43.21 AM GMT ]
இதுதொடர்பாக தேசப்பற்று தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர கருத்து தெரிவிக்கையில்,
வட மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு முன்னர், காணி, பொலிஸ் அதிகாரங்களை இல்லாமல் செய்ய வேண்டும் என்று அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்த போதிலும், இலங்கை அரசாங்கம் அதற்குச் செவிசாய்ப்பதாகத் தெரியவில்லை.
மாறாக, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் விரித்த வலையில் இலங்கை அரசாங்கம் சிக்கிக் கொண்டுள்ளது.
அடுத்த ஆண்டு இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. அதுவரை 13வது திருத்தச் சட்டத்தில் இலங்கை அரசாங்கம் கை வைக்கக் கூடாது என்பதே சிவ்சங்கர் மேனன் விரித்த வலை.
இலங்கை அரசாங்கம் இதில் மீள முடியாமல் சிக்கிக் கொண்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் நாட்டைக் குறித்துச் சிந்திப்பதில்லை.
கொமன்வெல்த் மாநாட்டின் தலைமைப் பதவியை பெற்றுக் கொள்வதே அதற்கு முக்கியமாகவுள்ளது.
எனவே தான், 13வது திருத்தச்சட்டத்தின் காணி, பொலிஸ் அதிகாரங்களின் பயங்கரத்தை உதறித்தள்ளி விட்டு, வடக்கில் தேர்தலை நடத்தப் போகிறது.
இந்தத் தேர்தலின் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் தனித் தமிழீழத்துக்கான விசுவரூபத்தை எடுக்கும்.
அத்துடன் இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் மேலும் சர்வதேச நாடுகளின் அழுத்தங்கள் அதிகரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
லண்டனில் 30ம் ஆண்டு கறுப்பு ஜூலை நினைவுதினத்தில் நிலஅபகரிப்பு எதிர்ப்பு போராட்டம்
[ புதன்கிழமை, 24 யூலை 2013, 01:38.56 AM GMT ]
1983ம் ஆண்டு ஜூலை மாதம் 23ம் திகதி இலங்கையின் சிங்கள பேரினவாத அரசினால் தமிழ் மக்களுக் கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையின் 30ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பிரித்தானியத் தமிழர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல் மற்றும் ஆர்ப்பாட்ட நிகழ்வுகள் எழுச்சியோடு இடம்பெற்றன.
நேற்று பிற்பகல் 4 மணியளவில் பிரித்தானிய பிரதம மந்திரியின் உத்தியோகபூர்வ வதிவிடமான 10 Downing Street முன்பாக ஆரம்பமாகி இரவு 7 மணி வரை மிக எழுச்சியோடு இந்நிகழ்வுகள் நடை பெற்றது.
இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டை பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் மற்றும் இளவரசர் சாள்ஸ் ஆகியோர் புறக்கணிக்க வேண்டுமென்றும், தமிழர் தாயக பகுதிகளில் நடைபெறும் திட்டமிட்ட இனவழிப்பு, இராணுவமயப்படுத்தல், பௌத்தமயப்படுத்தல் மற்றும் காணி அபகரிப்பு போன்றவற்றை நிறுத்த அழுத்தம் கொடுக்கக் கோரியுமான பதாதைகளை ஏந்திய வண்ணம் இவ் ஆர்ப்பாட்டத்தில் பல நூற்றுக்கணக்கான பிரித்தானிய வாழ் தமிழ் மக்கள் பங்கேற்றனர்.
பிரதமரே இலங்கைக்கு செல்லாதீர்கள் எனவும், கொலைகார ராஜபக்சவை பொதுநலவாய நாடுகளின் தலைமையை ஏற்க விடவேண்டாம் என்றும், தமிழரின் பூர்விக நிலங்களை ஆக்கிரமிப்பதை தடுத்து நிறுத்தக் கோரியும் உணர்வுபூர்வமாக குழுமியிருந்த தமிழ் மக்கள் உரக்கக் குரல் எழுப்பினர்.
அத்துடன் பிரித்தானியத் தமிழர் பேரவையின் தொண்டர்களால் அங்கு வந்திருந்த மக்களிடம் தத்தம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்களை பிரித்தானிய பிரதமரிடம் அழுத்தம் கொடுக்குமாறு கோரும் மனுக்களில் கையெழுத்து பெறப்படதுடன், இலங்கையைப் புறக்கணிக்கக் கோரும் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. தாயகத்தில் கடந்த காலங்களிலும் தற்போதும் பறிபோகும் இடங்களின் வரை படங்கள் பலரினதும் கவனத்தை ஈர்த்தது.
அங்கு உரையாற்றிய, தமிழின உணர்வாளர் திரு ராஜமனோகரன் அவர்கள் 1983ம் ஆண்டு இன அழிப்பின் துயர நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
எமது மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளை சர்வதேசத்தின் கவனத்திற்கு நாம் ஓயாது தொடர்ந்து கொண்டு செல்லல் மிகவும் அவசியம். இவ் விடயங்கள் தொடர்பில் ஏற்கனவே பிரித்தானிய தமிழர் பேரவை பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
அந்த வகையிலே தமிழரின் பூர்விக நிலங்கள் பறிமுதல் செய்யப் படுவதை நிறுத்த வேண்டுமென்று "Stop Uprooting Tamils From Their Land " என்ற பரப்புரை போராட்டம் ஒன்றை பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் திரு ரவிக்குமாரால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த பரப்புரை நடவடிக்கையை சிறப்புற முன்னெடுப்பதற்கு, தாய்த்தமிழகம், புலம் பெயர் மற்றும் தாயக உறவுகளின் பங்களிப்புகள் தேவை என்றும், குறிப்பாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் சார்பான தகவல்கள் பற்றி பிரித்தானியத் தமிழர் பேரவையுடன் தொடர்பு கொண்டு பரிமாறுமாறும் வேண்டிக் கொண்டார்.
இறுதியில் அழிக்கப்பட்ட மக்களின் நினைவாக மெழுகுவர்த்தி ஏற்றி நிகழ்வு நிறைவு செய்யப்பட்டது.
Geen opmerkingen:
Een reactie posten