புலிகளின் தங்கம் எனத் தெரிவித்து பண மோசடி செய்த அரசியல்வாதி கைது -கைத்துப்பாக்கி ஒன்றை 10 ஆயிரத்திற்கு விற்பனை செய்த பொலிஸ் கைது
[ வெள்ளிக்கிழமை, 05 யூலை 2013, 02:41.02 AM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட பெருந்தொகை தங்கத்தை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய உள்ளதாகத் தெரிவித்து, வர்த்தகர் ஒருவரிடம் ஒரு கோடி ரூபா மோசடி செய்த அரசியல்வாதி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
முன்னாள் மாகாணசபை உறுப்பினரே ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தில் இருக்கும் அமைச்சர்களுக்கிடையில், நாட்டிற்குள் இனவாதம் மற்றும் மதவாத தீயை அணைப்பதற்காக நேர்மையாக முயற்சிப்பவர்கள் 50 வீதமானவர்களே என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்து்ளளார்.
உயர் பாதுகாப்பு அதிகாரி என தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட குறித்த அரசியல்வாதி, வத்தளை பிரதேச வர்த்தகர் ஒருவரை ஏமாற்றியுள்ளார்.
இதேபோன்று புலிகளின் தங்கம் இருப்பதாகத் தெரிவித்து சந்தேக நபர் பலரை ஏமாற்றியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
60 வயதான சந்தேக நபர் மேல் மாகாணசபை உறுப்பினராக கடமையாற்றியுள்ளார்.
கைத்துப்பாக்கி ஒன்றை பத்தாயிரத்திற்கு விற்பனை செய்த பொலிஸ் சார்ஜன்ட் கைது
கைத்துப்பாக்கி ஒன்றை பத்தாயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸ் ஆயுத களஞ்சியத்தில் வைக்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ கைத்துப்பாக்கியொன்று இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அக்குரஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் சார்ஜன்ட், தனது மைத்துனரின் ஊடாக கைத் துப்பாக்கியை மற்றுமொரு நபருக்கு விற்பனை செய்துள்ளார்.
ஆயுதக் களஞ்சியத்தில் வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கியொன்று காணாமல் போனமை தொடர்பில் நடத்திய விசாரணைகளின் போது, குறித்த கைத்துப்பாக்கி விற்பனை செய்யப்பட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நாட்டில் இனவாத தீயை ஏற்படுத்தும் அமைச்சர்கள் அதை நிறுத்த வேண்டும்: வாசுதேவ நாணயக்கார
[ வெள்ளிக்கிழமை, 05 யூலை 2013, 03:41.09 AM GMT ]
ஏனையவர்களில் பெருபாலானவர்கள், இனவாத, மதவாத செயற்பாடுகளில் நேரடியாக ஈடுபடாவிட்டாலும் அதற்கு ரகசியமான முறையில் பங்களிப்பு செய்து வருகின்றனர்.
தமது இனம் மற்றும் மதம் தொடர்பில் கொண்டுள்ள குருட்டுத்தனமாக பக்தி காரணமாவே அவர்கள் அவ்வாறு செய்யப்பட்டு வருகிறார்கள்.
இது நாட்டிற்குள் தேவையற்ற வன்செயல்கள் ஏற்பட வழிவகுக்கும்.
நாட்டில் இன மற்றும் மத வாத தீயை ஏற்படுத்த தாம் தெரிந்தோ தெரியாமலோ உதவி வரும் அமைச்சர்கள் அனை தற்போதாவது நிறுத்தி கொள்ள வேண்டும் எனவும் வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten