தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 22 juli 2014

இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் தொடர்பில் அவுஸ்திரேலியா அரசாங்கம் பதில் மனு!

வடக்கில் பொதுமக்களின் விருப்பமின்றி காணிகள் சுவீகரிக்கப்படாது என ஜனாதிபதி சொல்ல வேண்டும்!- சுரேஸ் எம்.பி
[ செவ்வாய்க்கிழமை, 22 யூலை 2014, 02:22.30 AM GMT ]
வடக்கில் பொதுமக்களின் விருப்பமின்றி அவர்களது காணிகள் சுவீகரிக்கப்படாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தெளிவாகச் சொல்ல வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
நேற்று திங்கட்கிழமை அச்சுவேலி, இராச வீதியில் பொதுமக்களுடைய 53 பரப்புக் காணிகளை இராணுவ முகாமிற்கு சுவீகரிக்கும் நோக்கில் அளவீடுகள் செய்ய நிலஅளவையாளர் திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியினைத் தடுத்து நிறுத்திய பின்னர் கருத்துக் கூறுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

அச்சுவேலியில் பொதுமக்களின் காணிகளை அளவீடு செய்வதற்காக நேற்று நிலஅளவையாளர்கள் அனுப்பட்டு இருந்தார்கள். பொலிஸாரும் வருகை தந்திருந்தார்கள். சம்பந்தப்பட்ட காணி உரிமையாளர்களின் எந்தவித ஒப்புதலும் இன்றி தான்தோன்றித்தனமான முறையில் அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்தக் காணிகளை அளவீடு செய்வதற்கு காணி உரிமையாளர்கள் அனுமதியின்றி மேற்கொள்ள முடியாது என கூறினோம். அதனை பொலிசாரும் ஏற்று கொண்டுள்ளனர்.
நிலஅளவை பணிக்கு வந்தவர்களிடமும் இது சட்டத்திற்கு முரணான வகையில் நீங்கள் காணி அளவீட்டில் ஈடுபட முயல்கின்றீர்கள். அவ்வாறு சட்டத்திற்கு முரணான வகையில் நீங்க ஈடுபட முடியாது எனக் கூறினோம்.
அரசாங்கமும், அதிகாரிகளும் மற்றும் அமைச்சர் உட்பட எல்லோருமே சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்காமல் சட்டத்தின் பிரகாரம் செய்யவேண்டும்.  சட்டத்தின் பிரகாரம் செய்வதாயின் காணி உரிமையாளர்களிடம் அதனை கேட்டு, அவர்களுடன் கலந்துரையாடி, மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களுடன் அது தொடர்பாக கலந்துரையாடி மேற்கொள்ள வேண்டும்.
ஆனால் வடக்கு, கிழக்கில் மட்டும் சட்டத்திற்கு புறம்பாக இவ்வாறு மேற்கொள்வது ஆக்கபூர்வமானது அல்ல.
அண்மையில் இரத்தினபுரியில் ஜனாதிபதி உரையாற்றும் போது, பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக சுவீகரிக்ககூடாது என கூறி இருக்கின்றார். ஆகவே அந்த விடயம் இரத்தினபுரிக்கு மட்டுமல்ல அது வடமாகாணத்திற்கும் செல்லுபடியாகும் என்பதை நாங்கள் நம்புகின்றோம்.
பொதுமக்களின் காணிகளை அவர்களின் விருப்பமின்றி வடக்கிலும் சுவீகரிக்க முடியாது என்பதை ஜனாதிபதியும் மிகத் தெளிவாகச் சொல்ல வேண்டும். அதனை இந்த அதிகாரிகளும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRWLclx7.html


யுத்த வெற்றி இலங்கைக்கு மட்டுமல்ல! தெற்காசியாவுக்கே உரியது: யாழ்.கட்டளைத் தளபதி
[ செவ்வாய்க்கிழமை, 22 யூலை 2014, 03:36.15 AM GMT ]
இலங்கை அயல் நாடுகளுடன் பேணிய நட்புறவே பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து முற்றாக விடுபடுவதற்கு காரணமென யாழ். மாவட்டப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித்தார்.
யாழ். காங்கேசன்துறை, தல்செவன விருந்தினர் விடுதியில் நேற்று ஆரம்பமான இலங்கை சுங்கத் திணைக்களத்தின் 33 அலுவலர்களுக்கான சுயமதிப்பீட்டு தலைமைத்துவப் பயிற்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை சுங்கத் திணைக்களம் மற்றும் யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் நேற்று ஆரம்பமான இந்த செயலமர்வு, தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெறவுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய உதய பெரேரா,
இந்தியா, சீனா உட்பட ஏனைய அயல் நாடுகளுடன் பேணப்பட்டு வந்த நட்புறவுச் செயற்பாடுகள் காரணமாகவே பயங்கரவாதத்தின் பிடியிலிருந்த எமக்கு வெற்றி கிடைத்தது.
கடந்த யுத்த காலத்தில் நவீன ஆயுதங்களை நாங்கள் முதலில் பயங்கரவாதிகளிடமிருந்தே பெற்றுக்கொண்டோம். அதன் பின்னரே நாம் அதனை உரிய முறையில் பெறக்கூடியதாக இருந்தது.
2006ஆம் ஆண்டின் பின்னர் கடுமையான எதிர்த் தாக்குதல்களை நாங்கள் மேற்கொள்ளத் தொடங்கியதும் விடுதலைப் புலிகள் ஆட்டம் காணத் தொடங்கினர்.
விடுதலைப் புலிகளுக்கு 32 நாடுகளில் தடை விதிக்கப்பட்டது. இதனால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். இந்த வெற்றியானது எமது நாட்டுக்கு மட்டுமல்லாமல் தெற்காசியாவுக்கே உரியதாக என்றார்.

தமிழகத்தில் 34 ஆண்டுகளுக்குப் பிறகு உறவினர்களை சந்தித்த இலங்கைப் பெண்
[ செவ்வாய்க்கிழமை, 22 யூலை 2014, 04:03.18 AM GMT ]
தமிழகம், கன்னியாகுமரி மாவட்டத்தில் இலங்கை அகதிகள் முகாமில் வசித்துவரும் இலங்கை பெண் அகதியொருவர் 34 ஆண்டுகளுக்குப் பிறகு தனது உறவினர்களை சந்தித்துள்ளார்.
இச்சம்பவமொன்று நேற்று இந்நிகழ்ச்சி நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் முன்னிலையில் நடைபெற்றது.
இலங்கையில் நடைபெற்ற இனக்கலவரத்தின்போது குடும்பத்தினரை பிரிந்து தமிழகம் வந்து வசிக்கும் அகதிகள் பலருக்கு, இலங்கையில் உள்ள தங்கள் உறவினர்களுடன் தொடர்பு இல்லாத நிலை நீடித்து வருகிறது.
இந்நிலையில், இதுபோன்ற இலங்கை அகதிகளுக்கு இலங்கையில் உள்ள அவர்களது உறவினர்களுடன் உறவை ஏற்படுத்தி கொடுக்கும் முயற்சியை இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் தமிழ்நாடு கிளை மேற்கொண்டது.
செஞ்சிலுவைச் சங்கத்தின் குமரி மாவட்டச் செயலர் டாக்டர் மோகன் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மூலம் இலங்கை அகதிகள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார்.
இந்தநிலையில், இலங்கையில் உள்ள செஞ்சிலுவைச் சங்க உதவியுடன் குமரி மாவட்டத்தில் உள்ள அகதிகள் முகாமில் உள்ள அகதிகளை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
ஞாறாவிளை அகதிகள் முகாமில் 34 ஆண்டுகளாக உறவினர்களை பிரிந்து தனியாக வசித்து வந்த இந்திராணி என்ற பெண்ணின் உறவினர்களை இலங்கையில் கண்டுபிடித்து குமரி மாவட்டத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
இதுபோல் பெருமாள்புரம் முகாமில் வசித்தும் வரும் சுகந்தி சுப்பிரமணியத்தின் உறவினர்களும் 19 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டு இங்கு அழைத்து வரப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக் கொண்ட அகதிகள் ஒருவரை ஒருவரை கட்டித் தழுவி ஆனந்த கண்ணீர் வடித்தனர். சந்திப்புக்கு ஏற்பாடு செய்த மாவட்ட ஆட்சியர் மற்றும் செஞ்சிலுவைச் சங்கச் செயலர் உள்ளிட்டோருக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் தொடர்பில் அவுஸ்திரேலியா அரசாங்கம் பதில் மனு
[ செவ்வாய்க்கிழமை, 22 யூலை 2014, 04:47.19 AM GMT ]
இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
அவுஸ்திரேலியா அரசாங்கத்திற்கு எதிராக புகலிடக் கோரிக்கையாளர்கள் அந்நாட்டு உயர் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், அண்மையில் கைது செய்யப்பட்ட 153 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களையும் நாடு கடத்தப்படுவதற்கு தடை விதித்திருந்தது.
மூன்று நாட்களுக்கு அரசாங்கத்தரப்பு நியாயங்களை விளக்கும் வகையில் பதில் மனுவொன்றை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் அதற்கு அமைய இன்றைய தினம் அவுஸ்திரேலிய அரசாங்கம், இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எதிராக பதில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.
இலங்கை அகதிகளை எப்படியோ இலங்கைக்கு திருப்பியனுப்பும் கடும்போக்கு கொள்கையை இந்த அரசாங்கம் கை விடும் எண்ணம் இல்லை என்பது மிகவும் தெட்ட தெளிவாக விளங்குகின்றது.
இவர்களின் நிலையை அரசாங்கம் எப்படியோ மூடி மறைக்க பார்க்கின்றது இவர்களின் நிலை என்ன என்பது இதுவரைக்கும் மர்மமான நிலையே காணப்படுகின்றது.
புகலிடக் கோரிக்கையாளர்கள் நடுக் கடலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆனால் மொரிசன் இதுவரைக்கும் உறுதிபடுத்தவும் இல்லை இவர்களின் நிலைதான் என்ன என்பது ஒரு புரியாத புதிராக உள்ளமை குறிப்பிடத்ததக்கது
http://www.tamilwin.com/show-RUmsyHRWLcko1.html

Geen opmerkingen:

Een reactie posten