கொழும்பில் பாஸ்போட்டில் பக்கங்களை மாற்றும் பெண்: கூண்டோடு சிக்கிய பிராடு கூட்டம் !
[ Jul 25, 2014 05:18:30 PM | வாசித்தோர் : 14550 ]
ஏற்கனவே வீசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட தகவல்களை கடவுச்சீட்டிலிருந்து நீக்கியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளனர். கடவுச்சீட்டு மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இருவரையும் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். குறித்த இருவரும் பிரித்தானியாவிற்கு பிரவேசிக்க பத்தாண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய குடிவரவு குடியகழ்வுச் சட்டங்களை மீறிச்செயற்பட எவருக்கும் அனுமதியளிக்கப் போவதில்லை என உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
போலியான ஆவணங்களை சமர்ப்பித்து வீசா விண்ணப்பம் செய்யக் கூடாது எனவும் அவ்வாறு செய்வதனால் பாதக விளைவுகள் ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
http://www.athirvu.com/newsdetail/565.htmlஆப்பிள் ஐ-போனுக்காக 14 தடவை சிங்களவனை கத்தியால் குத்திய பிரித்தானிய நபர் !
[ Jul 26, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 5965 ]
சம்பவ தினத்தன்று, தவிஷ பீரிஸ் பீட்சாவை கொண்டு சென்று ஒரு வீட்டில் கொடுத்துவிட்டு திரும்பிக்கொண்டு இருந்தவேளை அவர் கைகளில் ஆப்பிள் ஐ போன் இருப்பதை இவ்விருவரும் அவதானித்துள்ளார்கள். தவிஷ பீரிசை சுமார் 14 தடவை கத்தியால் குத்திவிட்டு அவரது ஐ-போனை பறித்துச் சென்றுள்ளார்கள். அவர் வைத்திருந்த பணத்திற்காக இக் கொலை நடைபெறவில்லை. வெறும் ஐ போனுக்காக நடந்துள்ளது என தற்போது அதிர்வு இணையம் அறிகிறது. மேலும் இந்த 2 நபர்களுக்கும் 23 வருட சிறைத்தண்டனை வழங்கி நீதிபதி தீர்பழித்துள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/566.htmlஅவுஸ்திரேலியாவுக்கு மூக்கு உடைந்தது: ஈழத் தமிழர்கள் போட்ட வழக்கு வெற்றி !
[ Jul 26, 2014 04:52:41 AM | வாசித்தோர் : 13195 ]
படகொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் 157 பேரையும் அவுஸ்திரேலியாவிற்கு மாற்றுமாறு அந்நாட்டின் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் தடுப்பு முகாமிற்கு அவர்களை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அந்த நாட்டின் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட 157 புகலிடக் கோரிக்கையாளர்கள் கோகோஸ் தீவிற்கும், அங்கிருந்து மேற்கு அவுஸ்திரேலியாவில் அமைந்துள்ள தடுப்பு முகாமிற்கும் மாற்றப்படவுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிய படகு கடந்த மாத ஆரம்பத்தில் இந்தியாவிலிருந்து புறப்பட்டதுடன், பின்னர் அவுஸ்திரேலிய கடற்பரப்பில் அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
http://www.athirvu.com/newsdetail/570.html
Geen opmerkingen:
Een reactie posten