கல்வி முறைமையில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும்: டளஸ் அழப்பெரும - முக்கிய தானியங்களின் இறக்குமதி வரி குறைப்பு
[ சனிக்கிழமை, 26 யூலை 2014, 02:46.10 AM GMT ]
கல்வித்துறைக்கு மொத்த தேசிய உற்பத்தியில் 6 வீதத்தை ஒதுக்குமாறு பல்கலைக்கழக பேராசிரியர்கள் கோரி வருகின்றனர். இது நல்லதொரு கோரிக்கை என்பது மறுப்பதற்கில்லை.
எனினும். தற்போது அமுலில் உள்ள மரபு ரீதியான கல்வி முறைமையில் 6 வீதமல்ல 60 வீதத்தை கல்விக்காக ஒதுக்கினாலும் வேலையில்லா பட்டதாரிகளே உருவாகின்றனர்.
இவ்வாறு பட்டதாரிகளை உருவாக்குவதன் மூலம் லிப்டன் சுற்று வட்டமும் கோட்டே ரயில் நிலையமும் மட்டுமே நிரம்பி வழியும்.
தொழில்சார் பயிற்சிகளை மேம்படுத்தக்கூடிய திட்டங்களே முன்னெடுக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய தொழில் பயிலுனர் அதிகாரசபை மற்றும் ஜேர்மன் டெக் ஆகிய தொழிற்பயிற்சி நிறுவனங்களின் பணியாளர்களை கௌரவிக்கும் நிகழ்வுகளில் பங்கேற்ற போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வு அண்மையில் கொழும்பில் நடைபெற்றது.
முக்கிய தானியங்களின் இறக்குமதி வரி குறைப்பு
இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்து வரும் நிலையில், முக்கிய தானியங்களின் இறக்குமதி வரிகளை அரசாங்கம் குறைத்துள்ளது.
உள்நாட்டில் கையிருப்பை உரிய முறையில் தக்கவைத்துக்கொள்ளும் முகமாகவே இந்த வரிக்குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி மைசூர் பருப்பு ஒரு கிலோவின் வரி மூன்று ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
கவ்பி 30 ரூபாவாலும், வட்டானா பருப்பு 7 ரூபாவாலும், பயறு 32 ரூபாவாலும் குரக்கன் 30 ரூபாவாலும், கடலை 5 ரூபாவாலும் இன்று முதல் குறைக்கப்பட்டுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyHRaLcjw0.html
அம்பாள்குளம் விவேகானந்தா பாடசாலையின் பெயரை மாற்றித்தருமாறு, வடமாகாண கல்வி அமைச்சரிடம் வேண்டுகோள்
[ சனிக்கிழமை, 26 யூலை 2014, 03:07.26 AM GMT ]
கிளிநொச்சியின் செல்வாநகர், அம்பாள்குளம், மலையாளபுரம், கிருஸ்ணபுரம், விநாயகபுரம், ஆனந்தநகர், பொன்னகர், பாரதிபுரம் போன்ற பின்தங்கிய கிராமங்களில், பிள்ளைகள் கல்விகற்கும் பாடசாலைகளில் உள்ள குறைபாடுகள் தேவைகளை அறியும் பொருட்டு கலந்துரையாடல் நடைபெற்றது.
மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, கிளிநொச்சி கிருஸ்ணபுரம் இராமகிருஸ்ணா வித்தியாலயத்தில் வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாணசபை உறுப்பினரும் முன்னாள் கல்விபணிப்பாளருமான அரியரத்தினம் மற்றும் கிளிநொச்சி வலய கல்விப்பணிப்பாளர்கள், பிதேசசபை உறுப்பினர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தக் கலந்துரையாடல் இராமகிருஸ்ணா வித்தியாலய அதிபர் சூரியகுமாரி தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட அதிபர்கள் தமது பாடசாலைகளின் குறைபாடுகள் தேவைகள் பற்றி சபையில் எடுத்துரைத்தனர்.
குறிப்பாக ஆசிரியர் பற்றாக்குறை, தண்ணீர் பிரச்சனை, கொட்டகைகள் இல்லாமை, அலுவலக வசதிகள் இல்லாமை போன்ற முக்கிய பிரச்சனைகளை எடுத்துரைத்தனர்.
அதேவேளை போருக்கு முன்பு தமிழ்சோலை என்ற பெயரிடப்பட்டு இயங்கிய பாடசாலையின் பெயரை போரின்பின் ஈ.பி.டி.பி குழுவினர் மாற்றியிருந்தனர்.
தற்போது மீண்டும் அப்பிரதேச மக்கள் தற்போது விவேகானந்தா வித்தியாலயம் என்ற பெயரில் இயங்கிவரும் பாடசாலையின் பெயரை மீண்டும் தமிழ்சோலையென மாற்றித்தருமாறு கோரிக்கை விடுத்தனர்.
கலந்துரையாடலில் கலந்து கொண்ட அதிபர்கள், ஆசிரியர்கள், கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகளின் கோரிக்கைகளை, செவிமடுத்த வடமாகாண கல்வி அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் தம் கருத்துக்களையும் அதற்குரிய தீர்வு நோக்கிய வழிகள் பற்றியும் கருத்துக்களையும் வெளியிட்டனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHRaLcjw1.html
நிறைவேற்று ஜனாதிபதி முறைமை குறித்து விசேட பேச்சுவார்த்தை
[ சனிக்கிழமை, 26 யூலை 2014, 04:02.04 AM GMT ]
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கப்பட வேண்டுமென இடதுசாரி கட்சிகள் ஜனாதிபதியிடம் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த நேரம் ஒன்றை ஒதுக்கித் தருமாறு இடதுசாரி கட்சிகள் கோரியிருந்தன.
அதன் அடிப்படையில் இந்த வாரத்தில் இடதுசாரி கட்சிகளுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
ஜனநாயக இடதுசாரி முன்னணி, லங்கா சமசமாஜ கட்சி மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஆகியன, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது.
அரசியல் அமைப்பு திருத்தச் சட்டத்தின் ஊடாக மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமென இடதுசாரி கட்சிகள் அரசாங்கத்திடம் யோசனைத் திட்டமொன்றை முன்வைத்துள்ளது.
இந்த யோசனைத் திட்டம் குறித்து ஜனாதிபதியுடன் வரும் வாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHRaLcjw3.html
தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கை நாட்டம் காட்டவில்லை: ஜெயபால்
[ சனிக்கிழமை, 26 யூலை 2014, 04:16.47 AM GMT ]
இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஒன்றை எட்ட தமிழக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. எனினும், இலங்கை அரசாங்க அதிகாரிகள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.
தமிழகத்தில் நடைபெற்ற முதல்கட்ட பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்ட போதிலும், இலங்கையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படவில்லை.
தமிழக மீனவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வுத் திட்டமொன்றை பெற்றுக்கொள்ள கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கச்சத்தீவு குறித்த நிலைப்பாடு சரியானதே என ஜெயபால் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி 10000 தமிழக மீனவர்கள் கால வரையில்லா பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHRaLcjw4.html
Geen opmerkingen:
Een reactie posten