தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 21 juli 2014

ஐ.நா.விசாரணைக்குழுவுக்கு தெற்காசிய நாடுகள் வீசா மறுப்பு! இலங்கைக்கு பெருவெற்றி!

யாழில் இருந்து இந்தியாவிற்கு படகில் தப்பிச் செல்ல முயன்றவர் கைது
[ திங்கட்கிழமை, 21 யூலை 2014, 03:24.19 AM GMT ]
யாழ். வல்வெட்டித்துறை கடலினூடாக படகில் இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இராசப்பா பகீர்சாமி (வயது 67) என்ற நபர், மீனவர்களுடன் சேர்ந்து படகொன்றில் இந்தியாவிற்குச் செல்ல முற்பட்ட வேளை நேற்று வல்வெட்டித்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலே குறித்த நபரைக் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர், இந்தியாவின் நாகப்பட்டிணத்தினைச் சேர்ந்தவர் என்றும் கடந்த 1987 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்து, வல்வெட்டித்துறையிலுள்ள தேநீர் கடையொன்றில் பணியாற்றி வந்துள்ளார் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த நிலையில், இவர் மீண்டும் இந்தியாவிற்குத் தப்பிச் செல்ல முற்பட்ட நிலையிலே கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHRVLcls6.html
ஐ.நா.விசாரணைக்குழுவுக்கு தெற்காசிய நாடுகள் வீசா மறுப்பு! இலங்கைக்கு பெருவெற்றி
[ திங்கட்கிழமை, 21 யூலை 2014, 05:00.38 AM GMT ]
இலங்கை மீது சர்வதேச விசாரணையை தொடுக்கவுள்ள ஐ.நா. நிபுணர் குழுவின் வருகைக்கு தெற்காசிய நாடுகள் வீசா வழங்க மறுத்துள்ளமை இலங்கைக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றியாகுமென மனித உரிமைகள் சட்டத்தரணி டாக்டர் பிரதீப மஹாநாம தெரிவித்தார்.
இலங்கை மீதான சர்வதேச விசாரணைகளுக்கான நிபுணர் குழு இலங்கைக்குள் வருவதற்கு அனுமதிக்க கூடாது என்றும் பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவி பிள்ளை தலைமையிலான நிபுணர்கள் குழு, விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்காது என்பதனை புரிந்து கொண்டவர்களாக, அயல் நாடுகளில் வீசா கோரும் முயற்சியில் இறங்கினர்.
அந்த வகையில் இலங்கைக்கு மிகவும் அண்மித்த நாடான இந்தியாவிலிருந்து விசாரணைகளை தொடுப்பதற்கு நவி பிள்ளையினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு முயற்சித்த போதும், வீசா வழங்க இந்தியா மறுத்துள்ளதனால் அந்த முயற்சியும் தோல்வியில் முடிவடைந்தது.
இதேபோன்று பாகிஸ்தானும் இலங்கை மீதான சர்வதேச விசாரணையினை வன்மையாக கண்டித்துள்ளதுடன் நிபுணர் குழுவிற்கு வீஸா வழங்க மறுத்துள்ளது.
மாலைதீவு, பங்களாதேஷ் ஆகிய தெற்காசிய நாடுகளும், இலங்கை மீது சர்வதேச விசாரணையினை தொடுப்பதற்கு இது உரிய தருணமல்ல என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளன.
எனவே அருகிலுள்ள நாடொன்றிலிருந்து விசாரணையை மேற்கொள்ள முடியாது சென்றமை எமக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.
எனவே இவர்கள் ஒஸ்லோ, லண்டன், ஜெனீவா போன்ற நகரங்களிலிருந்தே விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. இவர்கள் இறுதி வரையில் தமது சாட்சியாளர்களை வெளிப்படுத்தப் போவதில்லை.
அத்துடன் இணையதளங்களுக்கூடாக பெற்றுக் கொள்ளப்படும் சாட்சியங்கள் நம்பகத் தன்மையற்றவை. ஆகையினால் இந்த விசாரணை வெற்றியளிப்பதற்கான சாத்தியங்கள் இல்லையெனவும் சட்டத்தரணி பிரதீப மஹாநாம தெரிவித்தார்.
மேலும் நவி பிள்ளை, ஆரம்பத்தில் இலங்கையில் உள்நாட்டு விசாரணைகளின் அவசியத்தினை வலியுறுத்தியிருந்தார்.
அதற்கமைய உள்நாட்டு விசாரணைகளை துரிதப்படுத்தும் நோக்கில் நியமிக்கப்பட்டுள்ள காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக்குழுவுக்கு சர்வதேச நிபுணர்களின் ஆலோசனைகள் உள்வாங்கப்பட் டுள்ளமையானது அறிக்கையின் பெறுமதி மற்றும் நம்பகத்தன்மையை இரட்டிப்பாக்குமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRVLcls7.html

Geen opmerkingen:

Een reactie posten