முன்னாள் ஊடக செயலாளருக்கு எதிராக பொன்சேகா வழக்குத் தாக்கல் - இனவாதத்தை ஒழிக்க புத்திசாலி தலைவர்கள் வேண்டும்: ராஜித
[ புதன்கிழமை, 02 யூலை 2014, 07:15.42 AM GMT ]
500 மில்லியன் ரூபா இழப்பீடு கோரியே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சஞ்ஜீவ சமரசிங்க, சரத் பொன்சேகாவுக்கு அவதூறு ஏற்படும் வகையில் செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் வழியாக சமரசிங்க, பொன்சேகாவுக்கு அவதூறு ஏற்படும் வகையில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இதற்கு எதிராக அவருக்கு சட்டத்தரணி ஊடாக இழப்பீடு கோரி அறிவிப்பு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
அதற்கு பதில் கிடைக்காத நிலையில், வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஜனநாயகக் கட்சி குறிப்பிட்டுள்ளார்.
சரத் பொன்சேகா சர்வாதிகாரியாக நடந்து கொள்கிறார் என்று குற்றம் சுமத்தியிருந்த ஜனநாயகக் கட்சியின் முன்னாள் ஊடக செயலாளர் சஞ்ஜீவ சமரசிங்க, அந்த கட்சியில் இருந்த விலகி கொண்டார்.
பண மோசடி குற்றச்சாட்டு காரணமாக அவர் கட்சியில் இருந்து விலகியதா பொன்சேகா தரப்பினர் தெரிவித்திருந்தனர்.
இனவாதத்தை ஒழிக்க புத்திசாலி தலைவர்கள் வேண்டும்: அமைச்சர் ராஜித
புத்திசாலித்தனமான தலைவர்களுக்கே இனவாதத்தை இல்லாதொழிக்க முடியும் என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
இனப்பற்று எனக் கூறிக்கொண்டவர்கள், அளுத்கம பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையங்களில் இருந்த பொருட்களை வெளியில் எடுத்தவர்கள், அவற்றை தமது வீடுகளுக்கு கொண்டு சென்றுள்ளனர். இது சமூகத்திற்குள் ஏற்பட்டுள்ள நோய்.
புத்திசாலிகளுக்கும், புத்திசாலித்தனமான தலைவர்களுக்குமே இந்த நோயை சமூகத்தில் இருந்து குணப்படுத்த முடியும்.
சிலர் தமது தனிப்பட்ட நோக்கங்களை இனவாத பிரச்சினையாக்க முயற்சித்து வருகின்றனர். அந்த சேனா, இந்த சேனா என்று பல பக்கங்களில் இருந்து சேனை உருவாகி வருகின்றன. கடந்த காலங்களில் இந்த சேனாக்கள் எதுவும் இருக்கவில்லை.
சேனாக்கள் இணைந்து நாட்டை பிளவுப்படுத்த முயற்சித்து வருகின்றன.
அளுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற அழிவுகளால் 2 ஆயிரம் மில்லியன் ரூபா வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு மாத காலத்திற்குள் அரசாங்கம் இந்த அழிவுகளை அரசாங்கம் சீர்செய்து கொடுக்கும். சிலரது புத்திசாலித்தனமற்ற செயல்களால் இந்த அழிவு ஏற்பட்டது. 52 பேர் சிறையில் உள்ளனர். அவர்களை பார்ப்பதற்கு கூட எவருமில்லை.
பேருவளை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட பொசன் தோரணத்தை கூட காட்சிப்படுத்த முடியாது போனது. சிலர் நன்றாக சாப்பிட்டு, ஆடைகளை அணிந்து மகிழ்ச்சியாக இருப்பதை பார்ப்பவர்கள் தாமும் அப்படி இருக்க முயற்சிப்பதில்லை. பொறாமைப்படுகின்றனர்.
புத்த பகவான் வாழ்ந்த காலத்திலும் இப்படியான அழிவுகளை ஏற்படுத்தும் நபர்கள் இருந்தனர். நாம் சிலவற்றை புதிதாக நிர்மாணிக்கும் போது சிலர் அவற்றை உடைத்து போடுகின்றனர்.
கடைகளை உடைத்து அவற்றை வேடிக்கை பார்த்து மகிழ்ச்சியடைகின்றனர் எனவும் ராஜித சேனாரட்ன மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTWLbks1.html
| செய்தி |
விடுதலைப் புலி சந்தேக நபர் ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்!
[ புதன்கிழமை, 02 யூலை 2014, 09:59.06 AM GMT ]
விடுதலைப் புலிகளின் பயங்கரவாத செயல்களுடன் சம்பந்தப்பட்டார் என்ற குற்றச்சாட்டில் இவர் சுமார் 7 வருடங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
வவுனியா ஈச்சங்குளம் பிரதேசத்தை சேர்ந்த அருள் தம்பி என அழைக்கப்படும் ஜெகநாதன் முகுந்தன் என்ற சந்தேக நபரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சட்டமா அதிபரின் ஆலோசனையின் படி அரச சட்டத்தரணி கனிஸ்க ராஜகருண, நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்ததுடன் வழக்கை திரும்ப பெறுவதாக அறிவித்தார்.
2008 ஆம் ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதி மற்றும் ஏப்ரல் 30 ஆம் திகதி ஆகிய திகதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விடுதலைப் புலிகளின் உறுப்பினராக இருந்து 100 பொதுமக்களை பயன்படுத்தி மணலாறு பகுதியில் பதுங்குகுழியை அமைத்ததாக சந்தேக நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இதன் மூலம் சந்தேக நபர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் வகையிலான குற்றத்தை செய்துள்ளதாக சட்டமா அதிபர் அனுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
சந்தேக நபருக்கு எதிராக யாழ்ப்பாணம், மன்னார் மேல் நீதிமன்றங்கள் மற்றும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் ஆகியவற்றில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்ததுடன், சட்டமா அதிபரின் ஆலோசனையின் படி அந்த வழக்குகளில் இருந்தும் சந்தேக நபரை அனுராதபுரம் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHTWLbkty.html
கச்சதீவு ஒப்பந்தத்தை ரத்து செய்து மீனவர்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டும்!- மோடிக்கு ஜெயலலிதா கடிதம்
[ புதன்கிழமை, 02 யூலை 2014, 10:23.14 AM GMT ]
கச்சதீவு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா இன்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழக மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் மீன்பிடி உரிமை தொடர்பாக மீனவர்கள் பாதுகாப்பு சங்கம் தொடர்ந்த வழக்கில் மத்திய வெளியுறவுத்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கடல் எல்லை முடிந்துவிட்ட விஷயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கச்சதீவை சுற்றி இந்திய மீனவர்களுக்கு மீன்பிடிக்க உரிமை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்தியை படித்ததும் அதிர்ச்சி அடைந்தேன்.
அநேகமாக தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாண பத்திரம் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தயாரித்து ஒப்புதல் அளித்து, அது தங்களின் கவனத்திற்கு கொண்டுவரப்படாமல் இருக்கலாம்.
கச்சதீவு இராமநாதபுரம் ராஜாவுக்கு சொந்தமாக இருந்ததற்கு ஆவண சான்று உள்ளது. கச்சதீவை சுற்றி மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு பாரம்பரிய மீன்பிடி உரிமை உள்ளது. இதனை இலங்கைக்கு கொடுக்க ஒப்பந்தம் செய்ததன் மூலம் அந்த உரிமை பறிக்கப்பட்டுள்ளது.
எனவே, கச்சதீவை மீட்பது தொடர்பாக தமிழக சட்டசபையில் 1991ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளேன்.
இந்தியாவுக்கு சொந்தமான எந்த பகுதியையும் அரசியலமைப்பு சட்டத்திருத்தம் மூலமாக மட்டுமே வேறு நாட்டிற்கு கொடுக்க முடியும்.
எனவே, கச்சதீவை அரசியலமைப்பு சட்டத்திருத்தம் இல்லாமல் இலங்கைக்கு கொடுத்தது சட்டத்திற்கு புறம்பானது, செல்லாது. எனவே, கச்சதீவு ஒப்பந்தத்தை ரத்து செய்து இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்ட வேண்டும்.
கச்சதீவு ஒப்பந்தம் தொடர்பாக திருத்தப்பட்ட புதிய பிரமாணப் பத்திரத்தை தாமதமின்றி தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தாங்கள் உத்தரவிட வேண்டும். என்று குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTWLbktz.html
Geen opmerkingen:
Een reactie posten