[ புதன்கிழமை, 02 யூலை 2014, 11:08.02 AM GMT ]
அளுத்கம பேருவளை சம்பவங்கள் தொடர்பிலேயே விசாரணை நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஞானசார தேரரிடம் விசாரணை நடத்தப்படுவதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
வாக்கு மூலம் ஒன்றை அளிப்பதற்காக ஞானசார தேரர் பிற்பகல் குற்ற விசாரணைப் பிரிவிற்கு சென்றுள்ளதாக அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலன்த விதானகே தெரிவித்துள்ளார்.
ஒரு மணித்தியாலம் நடத்தப்பட்டுள்ளதாக இறுதியாக கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன
இதேவேளை சிஹல ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் அக்மீமன தேரரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHTWLbkt1.html
மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் விபத்தில் படுகாயம் - வாகன விபத்தில் குடும்பஸ்தர் பலி- வாகரையில் குடும்பஸ்தரைக் கடித்துக் குதறிய கரடி
[ புதன்கிழமை, 02 யூலை 2014, 11:55.31 AM GMT ]
வடக்கு மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் வாகன விபத்து ஒன்றில் சிக்கி படுகாயம் அடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வடக்கு மாகாண சபை உறுப்பினர் தனது வாகனத்தில் கோப்பாய் பகுதியில் சென்று கொண்டிருந்த போது டிப்பர் வாகனம் ஒன்றினை விலத்திச் செல்ல முற்பட்ட வேளை விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன் போது படுகாயம் அடைந்த சுகிர்தன் கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நோயாளர் காவுவண்டி மூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வாகன விபத்தில் குடும்பஸ்தர் பலி
மட்டக்களப்பு- கொழும்பு பிரதான வீதி, ரிதிதென்ன பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஓட்டமாவடி முதலாம் வட்டாரம் ஹஸரத் வீதியைச் சேர்ந்த முஹம்மது இஸ்மாயில் முஹம்மது சரீப் நௌபர் (வயது 24) என்ற நபரே உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிள் மீது பின்னால் வந்த வான் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த இவர் உடனடியாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுள்ளதுடன், வான் சாரதியைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வாகரையில் குடும்பஸ்தரைக் கடித்துக் குதறிய கரடி
தேன் எடுக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் இன்று கரடியின் தாக்குதலுக்கு இலக்காகி, படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆண்டான்குளம் காட்டுப் பகுதியில் இன்று காலை மனுக்கன் சிவக்கொழுந்து (வயது 64) என்ற எட்டு பிள்ளைகளின் தந்தை தேன் எடுக்கச் சென்றுள்ளார்.
இதன்போதே காட்டுக்குள் நின்ற கரடி அவரைக் கடித்துள்ளது.
இதனையடுத்து, வாகரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டார்.
எனினும், தற்போது மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த நபர் தனது ஜீவனோபாயத்திற்காக தேன் எடுத்து வியாபாரம் செய்யும் தொழிலை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyHTWLbkt2.html
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துங்கள்!- முஸ்லிம் பேரவை ஜனாதிபதியிடம் வலியுறுத்து!
[ புதன்கிழமை, 02 யூலை 2014, 10:59.24 AM GMT ]
ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள இலங்கை முஸ்லிம் பேரவை, மத சகிப்புத்தன்மை மற்றும் இன வெறுப்பை தூண்டும் பிரச்சினைகளை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரும் வகையிலும் அனைத்து சமூகங்களின் குறைகளை தீர்க்கும் வகையிலும் பயனுள்ள வழிமுறை உருவாக்கப்பட வேண்டும் எனவும் அதில் கோரப்பட்டுள்ளது.
இந்த இலக்கை நோக்கிச் செல்லும் வகையில். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் 9.218 மற்றும் 219 பரிந்துரைகளை அமுல்படுத்துவதில் ஜனாதிபதியின் உரிய தலையீடுகளை கோருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தலைமையில் நாட்டில் நடைபெற்ற போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர், நாடு அனைத்து துறைகளிலும் முன்னேற்றமடைந்து வரும் நிலையில், அளுத்கம மற்றும் பேருவளை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இரண்டு நாட்கள் இடம்பெற்ற வன்முறைகள் நாட்டின் முன்னேற்றத்தை பலவீனப்படுத்தியுள்ளது எனவும் முஸ்லிம் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த வன்முறைகளை சர்வதேச சமூகம் கண்டித்ததன் மூலம் இலங்கையின் தோற்றத்தை இருண்ட நிழல் மூடிக்கொண்டது.
முஸ்லிம் மற்றும் இதர சிறுபான்மை இனங்களுக்கு எதிராக பொதுபல சேனா அமைப்பு கடந்த இரண்டு வருடங்களாக முன்னெடுத்து வரும் பின்னணியில் இடம்பெற்ற இந்த வன்முறைகளை இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பும் கண்டித்துள்ளது.
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் ஏனைய முஸ்லிம் நாடுகள் இலங்கையின் மிகப் பெரிய நட்பு நாடுகள் என்பதுடன் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது இலங்கைக்கு ஆதரவு வழங்கின எனவும் இலங்கை முஸ்லிம் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHTWLbkt0.html
Geen opmerkingen:
Een reactie posten