அமெரிக்காவின் பிரபல நடிகையான அஞ்சலீனா ஜொலி அவர்கள் இரண்டு வாரத்திற்கு முன்னர், இலண்டனில் யுத்தத்தின் போது பாலியல் வன்புணர்வை ஒரு கருவியாக பயன்படுத்துவதை தடை செய்யவதற்கு ஒரு மாநாட்டினை நடத்தியிருந்தார். இதுபோன்ற மாநாடு நடைபெற 2009ம் ஆண்டு இலங்கையில் நடந்த பாலியல் வன்கொடுமை, சிரியா மற்றும் ஆபிரிக்க நாடுகளில் நடந்த கொடுமைகளே காரணமாக அமைந்தது. இம்மாநாட்டில் இலங்கையில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டோரை பார்வையிட அஞ்சலீனா ஜொலி அவர்கள் விருப்பம் தெரிவித்து இருந்தார். இதனை இலங்கையில் உள்ள சிங்கள மனித உரிமை அமைப்பின் செயற்பாட்டாளர்கள் மூலம் ஏற்பாடு செய்ய அவர் நடவடிக்கை மேற்கொண்டு இருந்தார் என அறியப்படுகிறது.
இதன் காரணமாக இலங்கையில் உள்ள பெண் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் அழைக்கப்பட்டார்கள். அவர்கள் லண்டன் வரும்வேளை பாதிக்கப்பட்ட சில தமிழ் பெண்களையும் அழைத்து வருவார்கள் என்று எதிர்பார்கப்பட்டது. ஆனால் அவர்கள் ஒரு தமிழரைக்கூட அழைத்துவரவில்லை. சிங்களவர்களை மட்டுமே கூட்டிச்சென்றுள்ளார்கள். இது இங்குள்ள புகைப்படம் மூலம் உறுதியாகின்றது. இப்படத்தில் அஞ்சலீனா ஜொலி அவர்களுடன் சிங்கள மனித உரிமை செயற்பாட்டாளர் நிமல்கா பெனான்டோ அவர்களும் இரண்டு சிங்கள பெண்கள் மட்டுமே இருக்கின்றனர். இது தமிழ் சமூகத்தினர் மத்தியில் பெரும் அதிர்சியையும் அதிருப்த்தியையும் தோற்றுவித்துள்ளது.
http://www.athirvu.com/newsdetail/322.html
Geen opmerkingen:
Een reactie posten