[ செவ்வாய்க்கிழமை, 01 யூலை 2014, 06:09.55 AM GMT ]
அம்பாறை, கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தில் ஸ்ரீலங்கா தௌபீக் ஜூம்மா மார்க்க ஒன்றுகூடல் கட்டிடம் மீது இனம் தெரியாதோரினால் நேற்றிரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதனையடுத்தே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தில் ஸ்ரீலங்கா தௌபீக் ஜூம்மா மார்க்க ஒன்றுகூடல் கட்டிடம் மீது இனம் தெரியாதோரினால் நேற்றிரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதனையடுத்தே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா தௌபீக் ஜூம்மா மார்க்கம் சம்மந்தமாக கலந்துரையாடப்படும் ஒன்றுகூடல் கட்டிடம் சாய்ந்தமருது கடற்கரை வீதியில் தகரத்தினால் அமைக்கப்பட்டு இயங்கிவந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த ஒன்றுகூடல் கட்டிடத்திற்கு சம்பவதினமான நேற்று திங்கட்கிழமை இரவு 7.00 மணியளவில் ஒரு குழுவினர் உள்நுளைந்து. அங்கிருக்கின்ற பொருட்கள் மற்றும் கட்டிடத்தின் தகரங்களை உடைத்து சேதமாக்கிய பின்பு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்தே அங்கு பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHTVLblv7.html
பாப்பரசர் வடக்கிற்கும் விஜயம் செய்வார்!- மன்னார் ஆயர் இல்லம்
[ செவ்வாய்க்கிழமை, 01 யூலை 2014, 07:02.55 AM GMT ]
இலங்கைக்கு அடுத்த வருடம் விஜயம் செய்யவுள்ள பாப்பரசர் பிரான்ஸிஸ், வடக்கிற்கும் விஜயம் செய்வார் என மன்னாரிலுள்ள ஆயர் இல்ல பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மன்னாரிலுள்ள மடு தேவாலய அதிகாரிகளை நேற்றையதினம் பாப்பரசரின் பாதுகாப்பு பணியாளர்கள் குழு சந்தித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சந்திப்பில் மடு தேவாலய நிர்வாக உத்தியோகத்தர் அருட்தந்தை எமலியானுஸ்பிள்ளை கலந்துகொண்டார்.
பாப்பரசரின் இலங்கைக்கான விஜயத்தின்போது, மடு தேவாலயத்திற்கும் அவர் வருகை தரவுள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
வத்திக்கானிலிருந்து வந்த குழுவினருக்கும் கர்தினால் ரஞ்ஜித்துக்கும் இடையில் நேற்றையதினம் நடந்த கூட்டத்தை அருந்தந்தை எமலியானுஸ்பிள்ளை உறுதிப்படுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், மடு தேவாலயம் மற்றும் வடக்கிற்கு பாப்பரசர் விஜயம் செய்வது தொடர்பில் இறுதித் தீர்மானம் பின்னர் எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
இதற்கிடையில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் வத்திக்கான் விஜயம் தொடர்பாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTVLblwz.html
குருக்கள்மடம் கடற்கரையோரப் புதை குழியைத் தோண்டும் நடவடிக்கை ஒத்திவைப்பு
[ செவ்வாய்க்கிழமை, 01 யூலை 2014, 07:31.14 AM GMT ]
கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்து புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குருக்கள்மடம் கடற்கரையோரப் புதை குழியைத் தோண்டும் நடவடிக்கை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பிரதேசத்தில் 12.7.1990 அன்று காத்தான்குடியைச் சேர்ந்த 165 பேர் கடத்திக் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த இடத்தை இன்று தோண்டுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.றியாழ் கடந்த ஜூன் மாதம் 23 ஆம் திகதி களுவாஞ்சிகுடி பொலிசாருக்கு உத்தரவிட்டிருந்தார்.
எனினும், இன்று தோண்டுவதற்குரிய ஏற்பாடுகள் இல்லாததாலும் சட்டவைத்திய நிபுணர் கொழும்பிலிருந்து உரிய இடத்திற்கு சமூகமளிக்க வேண்டும் என்பதாலும் தோண்டுவற்குரிய உபகரணங்கள் மற்றும் ஆட்கள் ஏற்பாடு செய்ய வேண்டியுள்ளதால் அதற்கு கால அவகாசம் தருமாறு கோரி களுவாஞ்சிக்குடி பொலிசார் நீதிமன்றத்தில் அறிக்கையொன்றை சமர்ப்பித்தனர்.
அந்த அறிக்கையை ஆராய்ந்த நீதிபதி ஏ.எம்.றியாழ் அடுத்த மாதம் 18 ஆம் திகதியன்று உரிய புதைகுழியை தோண்டுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு களுவாஞ்சிக்குடி பொலிசாருக்கு உத்தரவிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTVLblw0.html
Geen opmerkingen:
Een reactie posten